Wednesday, January 18, 2012


உலகமெல்லாம் என் வசம்

மாயையை அகற்று மாற்றங்கள்
 சூழ்ந்தாலும்  உன்  செயலால்   இறைவா  
மானிடன் என்   வாழ்வினிலே

பழம்   கிட்டவில்லை  என
தவம் செய்ய  புறப்பட்டாய்  இறைவா
ஞானப்   பழமாகிய   நீ 

வாழ்வை   தவமாக்கி   
மாயையில் மூழ்க வைத்தாய்   இறைவா 
மானிடன்  என்னை  நீ
 
உன்னால்   இயலாததும்   உளதோ   இவ்
வையத்திலே? ; வேண்டுகிறேன்  இறைவா    
உலகம்  என்  வசமாக
  
வேண்டுவதற்கு    இனி   வேறு   ஒன்றும்    இலாது
உயர்த்திடுவாய்  என்னையும்  நீ  கடவுளாக
உலகை   நானும்   காக்க ......