குழந்தை
குட்டிக் குழந்தையோ
விட்டுச் செல்ல மனமில்லையே
கட்டி எனை ஆள்கிறதே அது
கட்டிப் பிடித்து என்னை
கட்டிப் பிடித்து என்னை
முத்தம் கொடுத்து முத்தம் கொடுத்து என்
முன் உதடும் தேய்ந்ததே
முன் உதடு தேய்ந்தாலும் இங்கே இரு
முகமும் மலர்ந்ததே
முன் உதடு தேய்ந்தாலும் இங்கே இரு
முகமும் மலர்ந்ததே
சத்தம் இன்றி இரு மனமும் இங்கே
சந்தோஷத்தில் மிதக்கிறதே