Friday, May 22, 2015

எது அன்னியம் (social)

                                         எது அன்னியம்


தன்னந்தனியாக  நடந்தது  என்
கால்கள்  மட்டும்   அல்ல
மனமும் தான்   ஒரு
அந்நிய நாட்டு மண்ணிலே

துணை  ஒன்றை  கை கோர்த்து
வந்திருந்தால்   கால்   தடுக்கி
விழுந்திருக்க மாட்டேன் அன்று

தனியாக    தவித்தது   மனம்
 ஒரு நிமிடம்
உடனே உடல் எழுந்திருக்க
முடியவில்லையே   உடனே என்று

அச்சமயம்

ஓடும் வாகனத்திலிருந்து
ஒரு பெண் குரல்
oh my god ,are u ok ?
என்றதை   கேட்டதும் 

 உற்சாகம்  பெற்ற என் மனம்
உடலை ஊக்கி வைத்ததில்
உடன் எழுந்தது என் உடல்
உள்ளம் வாழ்த்தியது
உயிர் கொடுத்த அந்த குரலை

மீண்டும் தொடர்ந்தேன் நடையை
புத்துணர்வோடு


அன்னியம்  யென்பது
அருகாமையில் இருந்தும்
அன்பிலாது இருப்பது  தான்
என  உணர்ந்தது   மனம்...............

அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ் .............................