தீபங்களே ! ஒளி வீசுங்களேன் !
தித்திக்க தித்திக்க வருகின்றதே
தீப ஒளி எங்கெங்கும் ஐப்பசியிலே
கண்ணுக்கு விருந்தாக வண்ணங்கள் - நம்
எண்ணங்களை வடிக்கும் ஆடையிலே
மின்னல்கள் வந்தது போல கண்கள் கூச
மின்னும் மத்தாப்பு வித்தைகள் பூமியிலே - மகிழ்ச்சிப்
பட படப்பை நெஞ்சினில் ஏற்றும்
பட்டாசு சத்தங்கள் தெருவினிலே - வகை வகையாக
தித்திக்கும் சுவையான தின்பண்டங்களை
தருமே தீபாவளி எல்லோர் அகத்திலுமே
காணும் அற்புத காட்சியை கவிதையாக்க
கற்பனைக்கும் பஞ்சமில்லை இதயத்திலே
தீமைகள் இனி இல்லை என்று சொல்லி
தீபங்களே எங்கும் ஒளி வீசுங்களேன்
தித்திக்க தித்திக்க வருகின்றதே
தீப ஒளி எங்கெங்கும் ஐப்பசியிலே
கண்ணுக்கு விருந்தாக வண்ணங்கள் - நம்
எண்ணங்களை வடிக்கும் ஆடையிலே
மின்னல்கள் வந்தது போல கண்கள் கூச
மின்னும் மத்தாப்பு வித்தைகள் பூமியிலே - மகிழ்ச்சிப்
பட படப்பை நெஞ்சினில் ஏற்றும்
பட்டாசு சத்தங்கள் தெருவினிலே - வகை வகையாக
தித்திக்கும் சுவையான தின்பண்டங்களை
தருமே தீபாவளி எல்லோர் அகத்திலுமே
காணும் அற்புத காட்சியை கவிதையாக்க
கற்பனைக்கும் பஞ்சமில்லை இதயத்திலே
தீமைகள் இனி இல்லை என்று சொல்லி
தீபங்களே எங்கும் ஒளி வீசுங்களேன்