Monday, November 16, 2015
Sunday, November 1, 2015
கலாசாரம்
ஆள் பாதி ஆடை பாதி
பொதுவான பழமொழி இது
அரை அடி மனிதனையும் ஆறடியாக நிமிர்த்தும்
இந்த புத்தாடை: பின் அங்கே
தீபாவளிதான் என்றும் கொண்டாட்டம்தான்
மத்தாப்புதான் தித்திக்கும் பணியாரங்கள் தான் அன்பு
பரி மாற்றங்கள் தான்
எண்ணங்களைப் பிரதிபலிக்கும்
வண்ணங்கள் எல்லாம் புத்தாடையிலே
கண்ணுக்கு விருந்தாக
புத்தாடையில் பட்டாடைகள் கூறும் நம்
காஞ்சியின் பெருமையை உலகெங்கும்
பாவாடை தாவணியிலே கண்ட அழகெல்லாம்
வடநாட்டு பாணியிலே உல்லாசமிடும
புத்தாடை பூண்டு நம் தமிழ் நாட்டிலே
நம் தமிழ் நாட்டிலே
வெளி நாட்டு உடை அழகோ
புருவங்களை வளைத்து வியப்புரச் செய்யும்
காவியம் பாடும் என்றும் நம்
கலாச்சார உடைகள் மட்டுமே
புத்தாடையின் முழுப் பெருமையைக் காட்டி
மத்தாப்பும் மின்னும்
தித்திப்பும் சுவைக்கும் ஒரு
புத்தாடை இருந்தால் நம் கலாசாரத்திலே ...
Monday, October 26, 2015
தீபங்களே ! ஒளி வீசுங்களேன் !
தீபங்களே ! ஒளி வீசுங்களேன் !
தித்திக்க தித்திக்க வருகின்றதே
தீப ஒளி எங்கெங்கும் ஐப்பசியிலே
கண்ணுக்கு விருந்தாக வண்ணங்கள் - நம்
எண்ணங்களை வடிக்கும் ஆடையிலே
மின்னல்கள் வந்தது போல கண்கள் கூச
மின்னும் மத்தாப்பு வித்தைகள் பூமியிலே - மகிழ்ச்சிப்
பட படப்பை நெஞ்சினில் ஏற்றும்
பட்டாசு சத்தங்கள் தெருவினிலே - வகை வகையாக
தித்திக்கும் சுவையான தின்பண்டங்களை
தருமே தீபாவளி எல்லோர் அகத்திலுமே
காணும் அற்புத காட்சியை கவிதையாக்க
கற்பனைக்கும் பஞ்சமில்லை இதயத்திலே
தீமைகள் இனி இல்லை என்று சொல்லி
தீபங்களே எங்கும் ஒளி வீசுங்களேன்
தித்திக்க தித்திக்க வருகின்றதே
தீப ஒளி எங்கெங்கும் ஐப்பசியிலே
கண்ணுக்கு விருந்தாக வண்ணங்கள் - நம்
எண்ணங்களை வடிக்கும் ஆடையிலே
மின்னல்கள் வந்தது போல கண்கள் கூச
மின்னும் மத்தாப்பு வித்தைகள் பூமியிலே - மகிழ்ச்சிப்
பட படப்பை நெஞ்சினில் ஏற்றும்
பட்டாசு சத்தங்கள் தெருவினிலே - வகை வகையாக
தித்திக்கும் சுவையான தின்பண்டங்களை
தருமே தீபாவளி எல்லோர் அகத்திலுமே
காணும் அற்புத காட்சியை கவிதையாக்க
கற்பனைக்கும் பஞ்சமில்லை இதயத்திலே
தீமைகள் இனி இல்லை என்று சொல்லி
தீபங்களே எங்கும் ஒளி வீசுங்களேன்
Monday, August 3, 2015
கண்ணீர்
பச்சிளம் குழந்தை பத்து மாதம் தான்
பகிர்ந்து கொண்ட கருப்
பெட்டியிலிருந்து
பட்டென்று வெளி வந்ததும்
பதறி அழுகிறது கண்ணீர் விட்டு இப்
பெட்டகத்தில் வாழ இனி
இயலாதே ஒரு நாளும் எப்
பிறப்பு எடுத்தாலும் என்று ; பின்
பசிக்கு அழும் ; வலிக்கு அழும்
மற்றபடி இன்ப துன்பம்
இறந்த காலம் எதிர் காலம்
எதுவும் இல்லை இதற்கு
குழந்தை ஒரு ஞானி
ஞானி நன்கு வளர்ந்து
மகிழ்ந்து வாழ்ந்து
முதிர்ந்து பின் மெலிந்து
பச்சிளம் குழந்தை பத்து மாதம் தான்
பகிர்ந்து கொண்ட கருப்
பெட்டியிலிருந்து
பட்டென்று வெளி வந்ததும்
பதறி அழுகிறது கண்ணீர் விட்டு இப்
பெட்டகத்தில் வாழ இனி
இயலாதே ஒரு நாளும் எப்
பிறப்பு எடுத்தாலும் என்று ; பின்
பசிக்கு அழும் ; வலிக்கு அழும்
மற்றபடி இன்ப துன்பம்
இறந்த காலம் எதிர் காலம்
எதுவும் இல்லை இதற்கு
குழந்தை ஒரு ஞானி
ஞானி நன்கு வளர்ந்து
மகிழ்ந்து வாழ்ந்து
முதிர்ந்து பின் மெலிந்து
இறைவன் அடி சேர்கையில்
அய்யகோ காண இயலாதே
இனி இவரை என
மற்றவர் வடிப்பார் கண்ணீர்
இடையே வருபவை எல்லாம்
உள்ளத்தின் அழுக்குகள் ( கர்மா) அது
வெளியேறும் கண்களின்
வழியே கண் நீராக ..................
வழியே கண் நீராக ..................
Monday, July 20, 2015
தொழிலாளர் தினம்
தொழிலாளர் தினம்
செய்யும் தொழிலே தெய்வம்
இது ஒரு பழமொழி
பொருந்துமே இது இப்
புது உலகுக்கும்
தொழில் செய்யும்
தொழிலாளர் சிறந்தால்
பெறலாம் தெய்வம்
நிறைந்த உலகை
உலகம் நிறைந்தால்
நீங்கும் குறையெல்லாம்
குறையில்லா வாழ்வு பெற
வாழ்த்திடுவோம் தொழிலாளரை
தொழிலாளர் தினமான இம்
மே தினத்திலே .........................
செய்யும் தொழிலே தெய்வம்
இது ஒரு பழமொழி
பொருந்துமே இது இப்
புது உலகுக்கும்
தொழில் செய்யும்
தொழிலாளர் சிறந்தால்
பெறலாம் தெய்வம்
நிறைந்த உலகை
உலகம் நிறைந்தால்
நீங்கும் குறையெல்லாம்
குறையில்லா வாழ்வு பெற
வாழ்த்திடுவோம் தொழிலாளரை
தொழிலாளர் தினமான இம்
மே தினத்திலே .........................
Friday, May 22, 2015
எது அன்னியம் (social)
எது அன்னியம்
தன்னந்தனியாக நடந்தது என்
கால்கள் மட்டும் அல்ல
மனமும் தான் ஒரு
அந்நிய நாட்டு மண்ணிலே
துணை ஒன்றை கை கோர்த்து
வந்திருந்தால் கால் தடுக்கி
விழுந்திருக்க மாட்டேன் அன்று
தனியாக தவித்தது மனம்
ஒரு நிமிடம்
உடனே உடல் எழுந்திருக்க
முடியவில்லையே உடனே என்று
அச்சமயம்
ஓடும் வாகனத்திலிருந்து
ஒரு பெண் குரல்
oh my god ,are u ok ?
என்றதை கேட்டதும்
உற்சாகம் பெற்ற என் மனம்
உடலை ஊக்கி வைத்ததில்
உடன் எழுந்தது என் உடல்
உள்ளம் வாழ்த்தியது
உயிர் கொடுத்த அந்த குரலை
மீண்டும் தொடர்ந்தேன் நடையை
புத்துணர்வோடு
அன்னியம் யென்பது
அருகாமையில் இருந்தும்
அன்பிலாது இருப்பது தான்
என உணர்ந்தது மனம்...............
அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ் .............................
தன்னந்தனியாக நடந்தது என்
கால்கள் மட்டும் அல்ல
மனமும் தான் ஒரு
அந்நிய நாட்டு மண்ணிலே
துணை ஒன்றை கை கோர்த்து
வந்திருந்தால் கால் தடுக்கி
விழுந்திருக்க மாட்டேன் அன்று
தனியாக தவித்தது மனம்
ஒரு நிமிடம்
உடனே உடல் எழுந்திருக்க
முடியவில்லையே உடனே என்று
அச்சமயம்
ஓடும் வாகனத்திலிருந்து
ஒரு பெண் குரல்
oh my god ,are u ok ?
என்றதை கேட்டதும்
உற்சாகம் பெற்ற என் மனம்
உடலை ஊக்கி வைத்ததில்
உடன் எழுந்தது என் உடல்
உள்ளம் வாழ்த்தியது
உயிர் கொடுத்த அந்த குரலை
மீண்டும் தொடர்ந்தேன் நடையை
புத்துணர்வோடு
அன்னியம் யென்பது
அருகாமையில் இருந்தும்
அன்பிலாது இருப்பது தான்
என உணர்ந்தது மனம்...............
அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ் .............................
Saturday, January 31, 2015
குழந்தை
குழந்தை
குட்டிக் குழந்தையோ
விட்டுச் செல்ல மனமில்லையே
கட்டி எனை ஆள்கிறதே அது
கட்டிப் பிடித்து என்னை
கட்டிப் பிடித்து என்னை
முத்தம் கொடுத்து முத்தம் கொடுத்து என்
முன் உதடும் தேய்ந்ததே
முன் உதடு தேய்ந்தாலும் இங்கே இரு
முகமும் மலர்ந்ததே
முன் உதடு தேய்ந்தாலும் இங்கே இரு
முகமும் மலர்ந்ததே
சத்தம் இன்றி இரு மனமும் இங்கே
சந்தோஷத்தில் மிதக்கிறதே
Subscribe to:
Posts (Atom)