Monday, August 3, 2015

                                               கண்ணீர்

பச்சிளம் குழந்தை பத்து மாதம்  தான்
பகிர்ந்து கொண்ட கருப்
பெட்டியிலிருந்து
 பட்டென்று  வெளி வந்ததும்
பதறி அழுகிறது  கண்ணீர் விட்டு   இப்
பெட்டகத்தில் வாழ இனி
 இயலாதே  ஒரு நாளும்   எப்
பிறப்பு எடுத்தாலும் என்று  ;  பின்
பசிக்கு அழும் ; வலிக்கு  அழும்
மற்றபடி இன்ப துன்பம்
இறந்த காலம் எதிர் காலம்
எதுவும் இல்லை இதற்கு
குழந்தை ஒரு ஞானி

ஞானி நன்கு வளர்ந்து
மகிழ்ந்து வாழ்ந்து
 முதிர்ந்து பின் மெலிந்து
இறைவன் அடி சேர்கையில் 
அய்யகோ   காண இயலாதே  
இனி  இவரை  என
 மற்றவர் வடிப்பார்  கண்ணீர் 

இடையே வருபவை எல்லாம் 
உள்ளத்தின் அழுக்குகள் ( கர்மா) அது 
வெளியேறும்  கண்களின் 
வழியே    கண்   நீராக ..................


 

No comments:

Post a Comment