Tuesday, July 31, 2012

என் உயிர் காதலியே ( romantic)

 

நீ  என் கண்ணீரில் இருந்தால்
கரைந்திடுவாயே என கலங்கி
நின்ற போது  என் சிரிப்பாக வந்தாய்
சிங்காரமாக நான் மின்ன

நீ என் வறுமையில் இருந்தால்
வாடிடுவாயோ என
வருந்தி நின்ற போது  என்
பொருமையிலே வந்து நின்றாய்   எல்லாம்
பொன்மயமாக மின்ன


நீ  என்  தனிமையிலே வந்தால்
தித்திப்பாய் என சிந்தித்தபோது  என்
சிந்தனையே    நீயாய்  இருந்தாய்
வியந்தேனடி  என் கண்ணம்மா     ...................




--

No comments:

Post a Comment