Monday, July 21, 2014

தர்மம்

கணவன்  மனைவியாக
வாழ்வை   துவங்க     கண்ணகியை
விட்டு  பொருள்   ஈட்டத்தான்
விலகிச்  சென்றான்   கோவலன்


மாதவியின்  கலையின்   அழகில் 
அவன்   கட்டுண்டான்   விதிவசத்தால்
இடையில்  விளையாடியது  
மாதவியின்   தாயெனும்
பேராசைப்   பேயின்   சூட்சமம்

பொருளனைத்தும் இழந்து வந்த
கணவனுக்கு  தன்  மாணிக்க
கொலுசு  ஒன்றை  கொடுத்து
 அனுப்பிவைத்தாள்  வாழ்வை  சீராக்க

பாண்டிய    மன்னனோ
கோவலனை   குற்றவாளியாக்கி
கொலை செய்ய ஆணை  இட்டான்
 சிகை  அறுத்து

கண்ணகி நீதிதவறினான்  மன்னன்
என  சுட்டிக்கிகாட்டியதும்  தானே
வீழ்ந்து   மாண்டான்   மன்னன்
அங்கே சத்தியம்  உயர்ந்து நின்றதால்

கொலையுண்ட கணவனை உயிரோடு
மீட்டியது கண்ணகியின்
கற்பு எனும் தர்மம்

அவனை உயிர் பெற்று எழவைத்தது
கட்டிய மனைவியை மறந்து
வேறொரு பெண்ணின் அழகிலும்
கலையிலும்  மயங்கி மாண்டாயே
என  கேட்கவில்லை ; அங்கே  அவள்
பெண்மை உயர்த்து நின்றதால் ... பின்

அவளின்    கற்பு   எனும்  தர்மம் ஆவேசம்
கொண்டதால்  மதுரை  மாநகரே
இரையானது அக்னி தேவனுக்கு 
அங்கே வீற்றிருக்கும் அற்புத
சக்தியான அன்னை மீனாக்ஷி உடனே
அவளை  ஆட்கொண்டாள்

கண்ணகி  கதையைச்  சொல்லி
பெண்ணுக்கு  கற்பை  
பாடமாக்க   வேண்டாம்  ; கண்ணகி
படைத்தது   காவியமல்லவோ

கற்பு  என்பது  ஒரு  தர்மம்
மாபெரும்   சத்தியமும்  ஆகும்  அது
சத்யம் காப்பது ஆண் பெண்  இருவருக்கும்
சம   பங்கு   ஆகும்    வாழ்வினிலே





No comments:

Post a Comment