ஒன்றுபட்டால் வாழ்வு
அன்று
நடந்தால் வாழி காவேரி என
அகத்திய மாமுனி அழைக்க
அவளும் ஜதி சேர்த்து நடை பழகி
அழகிய ரதி போல வந்தாள்
நம் நாடு செழிக்க காவேரி தாய்
அவள் வாழ்க
இன்று
அன்போடு கைக் கூப்பி
அழுது வேண்டினாலும் அவளின்
உரிமை மறுக்கப்படுகிறதே
இந்த கர்நாடக பண்பு ஏன்
கலாச்சாரம் இறந்து விட்டதா
நம் இடையே
இங்கு
இந்தியர்கள் எல்லோரும் என்று
இணைந்தே வாழ்ந்தால்
இல்லாதது ஏதும் இல்லை
இந்த பாரதத் திரு நாட்டிலே
ஒன்று படுவோம் உயர்வோம்
ஒப்பில்லா இறைவன் அருளாலே .......