Thursday, October 27, 2016

ஒன்றுபட்டால் வாழ்வு


                                     ஒன்றுபட்டால்  வாழ்வு

அன்று

நடந்தால் வாழி காவேரி என
அகத்திய மாமுனி அழைக்க
அவளும் ஜதி சேர்த்து  நடை பழகி
அழகிய ரதி போல வந்தாள் 
நம் நாடு செழிக்க      காவேரி தாய்
அவள் வாழ்க

இன்று
அன்போடு கைக்  கூப்பி
அழுது வேண்டினாலும்  அவளின்
உரிமை மறுக்கப்படுகிறதே
இந்த கர்நாடக பண்பு ஏன்
கலாச்சாரம் இறந்து விட்டதா
நம் இடையே

இங்கு

இந்தியர்கள் எல்லோரும் என்று
இணைந்தே  வாழ்ந்தால்
இல்லாதது ஏதும் இல்லை
இந்த பாரதத்  திரு நாட்டிலே
ஒன்று படுவோம் உயர்வோம்
ஒப்பில்லா இறைவன் அருளாலே ....... 

No comments:

Post a Comment