Tuesday, October 25, 2016

வாழிய தமிழ் நாடே ......

                    வாழிய தமிழ் நாடே .....
.          

வானமே  வானமே  மேகம்  எங்கே  கூறுங்கள்
மேகமே கரு மேகமே நீரை கொஞ்சம் பருகுங்கள
 மின்னலே மின்னலே ஜாலம் கொஞ்சம் காட்டுங்கள்
இடிகளே இடிகளே முழக்கம் கொஞ்சம் செய்யுங்கள்
மனிதனே மனிதனே பாட்டு கொஞ்சம் பாடுங்கள்
வருணனே  வருணனே  இரக்கம் கொஞ்சம் காட்டுங்கள்

அதிசயம்   நிகழட்டுமே    இங்கு

மேகம் உருண்டிட இடிகள்  முழங்கிட
மின்னில் பளிச்சிட  வானம் பொழிந்திட
பூமி நனைந்திட  நதிகள் பெருகிட
பயிர்கள் தழைத்திட  ஏழைகள் சிரித்திட
இறைவன்  மகிழ்ந்திட  நாடும் வளம்பெற
இசைகள்  ஒலித்திட இன்பம் பெருகிட
வாழிய வாழிய வாழிய தமிழ் நாடே ......
வளர்ந்திட வளர்ந்திட நின்  பெருமையே 

No comments:

Post a Comment