ஆசை ஒன்றை திடீரென புகுத்தினர் என்னுள்
அவர்களின் அறிவு பற்றாக்குறையினால்
என்னோடு இருந்தவர்கள்
வளர்த்தேன் எனக்குள் அதை பக்தியோடு
ஆசையே துன்பத்திற்கும் காரணம் என்பர்
கேட்டு இருக்கிறேன்
ஆச்சர்யம் எழுந்தது என் மனதில் --இந்த
ஆசை வந்த பிறகு பெரும் அமைதி அல்லவா
சூழ்ந்து உள்ளது என்னை ----அப்படி என்றால்
எனக்குள் வளர்வது ஆசை இல்லையோ ?
சந்தேகம் வேண்டாம்
இது ஆசைதான் என்றது மனம் --ஒரு கால்
இறைவன் என் ஏட்டில் ஏற்கனவே
எழுதி இருக்கிறானோ இதை ?
மனம் எதையும் தேடவில்லை
தேடி வந்ததில் இனிமை கண்டது ---- என்னை
இன்னும் இளமையாக்கியது
புதுமையாக்கியது சிந்தனையில்
நன்றி சொல்லத் தோன்றுகிறது ---ஆசையை
எனக்குள் விதைத்தவர்களுக்கு !
A wish was pushed into my heart
in the lack of understanding
of the people with me
Started growing the wish within me
with devotion
have heard that longing or wishing for something
is the root cause of pain in life
got surprised because after having conceived
this wish in me
have become immersed in peace..then
this shouldn't be a wish then ---but
undoubtedly it's wish
my mind said firmly --wonder now
has god already written this wish in my life ?
my mind did not go in search of anything
instead has got filled with
what came searching for me
It has made me younger
giving me innovative feelings---Now I
feel like showing my gratitude who
has planted the wish seed in me
No comments:
Post a Comment