காலையில் ஆதவனை காண்கிறோம் ---- அவன்
இரவில் கண்ணுக்குத் தெரியவில்லை --நாமும்
சற்று ஓய்வெடுக்க ஒளிகிறான் போல
இரவில் நிலவை காண்கிறோம் ---நம்மில்
குளுமையைப் புகுத்துகிறது--- பின் அதுவும்
பகலில் மறைந்து நிற்கிறது
காலங்கள் மாறுகிறது வருடத்திற்கு
நான்கு முறை
கால நிலைக்கேற்ப இயற்கையின்
எழிலில் மாற்றம்
நிறம் மாறும் இலைகள்
வண்ண வண்ணப் பூக்கள் ----அதன் மேல்
வட்டமிடும் பட்டாம் பூச்சிகள் --இவை
கனவுகளை நம்மில் சிறகடிக்க வைக்கும்
மாற்றங்களும் வண்ணங்களும் இறைவன்
படைப்பில் நிரந்தரமானவை ---நாமும்
அவன் படைப்புதானே
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவிட்டால்
முரண்பாடு அல்லவோ தோன்றும்
No comments:
Post a Comment