பெண்மணி ஒருத்தியை சந்தித்தேன்
அத்தையோ மாமியோ சித்தியோ
அறியேன் நான்
முக்கால் நுற்றாண்டு கடந்தவள்
முந்தாநாள் திரண்டவள் போல் இருக்கிறாள்
ஆடுகிறாள் பாடுகிறாள் சிரிக்கிறாள்
சோழியை உருட்டி போட்டது போல
கல கலவென பேசுகிறாள்
பிரம்மனின் படைப்பை எண்ணி
வியக்கிறேன்
பிறப்பின் அருமையை
ரசித்து நிற்கிறேன்
No comments:
Post a Comment