Tuesday, May 31, 2011

நாளை நமதே ( social )

வளர்ந்த செடி பல
வண்ணம் கொண்ட
மலரைக் கொடுக்கிறது
ரசிப்பது மானிட வர்க்கமே
மலரிடம் செடி வேண்டுவது எதை ?

வளர்ந்த மரம் பல
சுவை மிகுந்த  
பழங்களைக் கொடுக்கிறது
சுவைத்து மகிழ்வது மானிட வர்க்கமே
பழத்திடம் மரம் வேண்டுவது எதை ?

பறவைகளும் மிருகங்களும்
குஞ்சினையும் குட்டியினையும்
ஈன்று வளரும் வரை
பராமரிக்கின்றன
அவைகள் தான் ஈன்றவைகளிடம்
வேண்டுவது எதை ?

மனிதனுக்கு மட்டும் தான்
இறைவன் ஆறறிவு கொடுத்துள்ளான்
குறைவோ நிறைவோ உன்
கடமையைச் செய்
குற்றவுணர்வு கொள்ளாதே
பலனையும் எதிர்பார்க்காதே

நல்லெண்ணமே இறைவன்
நம்பிக்கையே சிறந்த நண்பன்
நல்லெண்ணத்தை மனதில் பற்றி
நம்பிக்கையை கை பிடித்து
நடந்திட்டால்
நாளைய வெற்றி நமதே







Monday, May 23, 2011

எல்லாம் அவன் செயல்

நல்லவை நல்லவர்க்கு நடந்திட --தன்
நலம்  இல்லார்க்குப்  பிடிப்பது இல்லை
ஊக்கம் கொடுக்க மறுத்து  தன்
ஊனத்தைப் புகுத்திடுவர்
ஆதவனுக்கும் வெண் மதிக்கும்
கிரகணங்கள் வரலாம் --ஆனால்
ஆதவனையும் ஆசை முகம் காட்டி இரவை
அலங்கரிக்கும் மதியவளையும்
அடைக்கத் தாழ்கள் தான் உண்டோ
நல்லவை எண்ணி நல்லதை செய்து
நடை பயிலுவோம் வாழ்வில்
நடப்பவை  எல்லாம்  நலமாகும்
நாராயணன் அருளாலே






சங்கீதம் ( romantic)

முத்தங்கள் ஒவ்வொன்றாக பெற்றால்
சத்தங்கள் வந்திடுமே  
சத்தங்கள் இல்லையென்றால்
சங்கீதம் தோன்றிடுமா
முத்தங்கள் மழையாக பெய்தால்
சத்தங்கள் குறைந்திடுமே
முத்தங்கள் ஒவ்வொன்றாக வேண்டுமா
மொத்தமாக வேண்டுமா
சங்கீதம் இல்லாமல் போனால்
சந்தோஷம் குறைந்திடுமே ........

Friday, May 20, 2011

காதல் மயமாகி ....( romantic)

பரந்து உயர்ந்த நீல வானமே உன் மீது
தவழ்ந்து போகும்  தேய்பிறைக் காணா
நிலவு  நான் 


மயங்கும் இரவு வரும் பொழுது 
குளிர்ந்து   உனைத் தழுவிடுவேன்
காதலால் நான்

வெட்கம் எனைத் தழுவும்  போது
மேகமெனும் போர்வைக்குள்
மறைவேன் நான்  



மேனி காட்ட நீ ஆணையிடும் போ து
வேகமாக விலக்கிடுவேன் மேகத்தை
உனக்காக நான் 

மின்னும்  நட்சத்திரக் கூட்டமோ 
கண் சிமிட்டி இந்த  காதலைக்  கண்டு
வாழ்த்திடும் நம்மை  

இரவு  வளர  நிலவும்  வளரும்போது  
நம் காதலும் வளரும்
இறைவன் அருளாலே 

   

Tuesday, May 17, 2011

காதல் (romantic)


கண்டேன் ஒரு பெண்ணை -எனை
வென்றாள்  தன் இரு
 கண்களால்
இதயங்கள் இடம் மாறின
இதமான உறவு வளர  
புரிதல் பல நூறு
மலரும் விழியோரம்
தொடரும் பயணங்கள்
தருமே புது இன்பங்கள்
இறைவன் கருணை செய்ய
இருப்பேன் இளமையோடு !!!

Saw a woman who
won me with her beautiful eyes
The heart exchanged its place
To start a wonderful relationship
many understanding will bloom
through  the eye contacts itself
The journey of love will follow
giving beautiful experiences
God will shower his love
so will  remain young  !


Friday, May 13, 2011

தாயும் தெய்வமும் ( social)

அங்கத்தில் பாதியை
அம்பிகைக்கு அளித்து
அர்த்தநாரீஸ்வரன்
ஆகினான் ஈசன் --தன்
அங்கத்தில் பங்கு கொடுத்து
ஓர் உயிரை ஈன்றெடுத்து
அன்னையாகிறாள் பெண்
ஈன்றவள் ஈசனுக்கு
சமமாகிறாள் இங்கே
பெண்மையைப் போற்றுங்கள்
மென்மையைக்  காட்டி
தாய்மைக்கு    தலை வணங்குங்கள்
தாயைக்  காப்பாற்றி !



இரெண்டும் ஒன்றே ( kids)


குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலே
ஆம்
இருவரையும் கொண்டாடவேண்டும்

வளர்ந்தாலும் வருடத்தை  மட்டும்
ஏற்றுக்கொண்டு
வாழலாம்  குழந்தையாகவே 

குழந்தையாக வாழ்ந்தால் 
தெய்வம் அங்கு என்றும் வாழும்
தெய்வம் வாழுமிடம்
தேவலோகமாகும் 
வளரட்டும் குழந்தை உள்ளம் 
எல்லோரிடமும் 
பூலோகம்  எங்கும்
தெய்வங்கள்  வாழட்டும் !!!
  

Sunday, May 8, 2011

ஆள்வோமா (social)


பேசுவது கிளியா இல்லை
பெண் அரசி மொழியா
வியந்து சொன்னேன் ஒரு கவி
கிளி பேசும் ; சொன்னதைச் சொல்லும்
கேட்பவரை வசீகரிக்கும்
பெண் மொழிந்தாலும் இனிமையே ---அவள்
நல்லவை சொல்ல வேண்டும்
சொன்னதை செய்யவேண்டும் -பின் அவள்
மொழிக்கு அரசி ஆவாள்
மொழிவதெல்லாம் அமுதமானால்
ஆளுவது சொர்க்கமாகும்
மங்கையரே தயக்கமென்ன
ஆளலாம் வாருங்கள்
பூலோகம்  சொர்கமாகட்டும் !!!

A tamil song from a poet says
Is it the parrot speaking or the
queen of language
The parrot repeats what is said
still it is so beautiful