Tuesday, May 31, 2011

நாளை நமதே ( social )

வளர்ந்த செடி பல
வண்ணம் கொண்ட
மலரைக் கொடுக்கிறது
ரசிப்பது மானிட வர்க்கமே
மலரிடம் செடி வேண்டுவது எதை ?

வளர்ந்த மரம் பல
சுவை மிகுந்த  
பழங்களைக் கொடுக்கிறது
சுவைத்து மகிழ்வது மானிட வர்க்கமே
பழத்திடம் மரம் வேண்டுவது எதை ?

பறவைகளும் மிருகங்களும்
குஞ்சினையும் குட்டியினையும்
ஈன்று வளரும் வரை
பராமரிக்கின்றன
அவைகள் தான் ஈன்றவைகளிடம்
வேண்டுவது எதை ?

மனிதனுக்கு மட்டும் தான்
இறைவன் ஆறறிவு கொடுத்துள்ளான்
குறைவோ நிறைவோ உன்
கடமையைச் செய்
குற்றவுணர்வு கொள்ளாதே
பலனையும் எதிர்பார்க்காதே

நல்லெண்ணமே இறைவன்
நம்பிக்கையே சிறந்த நண்பன்
நல்லெண்ணத்தை மனதில் பற்றி
நம்பிக்கையை கை பிடித்து
நடந்திட்டால்
நாளைய வெற்றி நமதே







No comments:

Post a Comment