பரந்து உயர்ந்த நீல வானமே உன் மீது
தவழ்ந்து போகும் தேய்பிறைக் காணா
நிலவு நான்
மயங்கும் இரவு வரும் பொழுது
குளிர்ந்து உனைத் தழுவிடுவேன்
காதலால் நான்
வெட்கம் எனைத் தழுவும் போது
மேகமெனும் போர்வைக்குள்
மறைவேன் நான்
காதலால் நான்
வெட்கம் எனைத் தழுவும் போது
மேகமெனும் போர்வைக்குள்
மறைவேன் நான்
மேனி காட்ட நீ ஆணையிடும் போ து
வேகமாக விலக்கிடுவேன் மேகத்தை
உனக்காக நான்
மின்னும் நட்சத்திரக் கூட்டமோ
கண் சிமிட்டி இந்த காதலைக் கண்டு
வாழ்த்திடும் நம்மை
வாழ்த்திடும் நம்மை
இரவு வளர நிலவும் வளரும்போது
நம் காதலும் வளரும்
இறைவன் அருளாலே
நம் காதலும் வளரும்
இறைவன் அருளாலே
No comments:
Post a Comment