Thursday, August 9, 2012

கண்ணன் பிறந்தான் இன்று ( August 10 ,2012 ) divine

                                   




கண்ணன் பிறந்தான் இன்று
பிருந்தாவனம்  எங்கும் 
தேவ கானம்  இசைக்க

கண்ணன் பிறந்தான் இன்று
பல கோடி தேவர்களின்
கவலை மறைய

கண்ணன் பிறந்தான் இன்று
பல  கோடி உள்ளத்தில்
குறும்பு பிறக்க

கண்ணன் பிறந்தான் இன்று
வெண்ணை என  பக்தியில் உருகிடும்
உள்ளங்கள் களவு போக

கண்ணன் பிறந்தான் இன்று  
கயவர் மனமெல்லாம்
பயத்தில்  கலக்கம் கொள்ள

கண்ணன் பிறந்தான் இன்று
யமுனா நதிக்கரையிலே
காளிங்க நர்த்தனம் நடத்த

கண்ணன் பிறந்தான் இன்று
மாமுனிகளும் மதி மயங்கி
அழகில் மோகம் கொள்ள

கண்ணன் பிறந்தான் இன்று
பக்தர்கள் உள்ளமெல்லாம்
பரவசம் கொள்ள

கண்ணன் பிறந்தான் இன்று
பல கோடி கோபிகர் நெஞ்சில்
காதல் கரை புரள

கண்ணன் பிறந்தான் இன்று
நல்ல  எண்ணம் கொண்ட
கவிகள் பிறக்க

கண்ணன் பிறந்தான் இன்று
பாண்டவர் பலம்
பன்மடங்கு  பெருக

கண்ணன் பிறந்தான் இன்று
பாஞ்சாலியின் பக்தி
பார் முழுதும் பரவ

கண்ணன் பிறந்தான் இன்று
பாரதப் போருக்கு முன்
பகவத்  கீதையை  நமக்கு  அருள .................


LORD KRISHNA IS BORN
The whole of Brindavan
Filled with Divine music

LORD KRISHNA IS BORN
Worries  of millions of
Divine people disappeared

LORD KRISHNA IS BORN
Playfullness filled
millions of heart

LORD KRISHNA IS BORN
All the hearts that melt
like butter got stolen Him

LORD KRISHNA IS BORN
All the people with
criminal mind got scared/tensed

LORD KRISHNA IS BORN
The dance of Kalinga performed
at the bank of river Yamuna

LORD KRISHNA IS BORN
EVEN the great sages
fell in love with Beauty

LORD KRISHNA IS BORN
Peoples hearts are
filled with Divinity

LORD KRISHNA IS BORN
Love started to flow
in the hearts of Gopikas
the women of Yadava Dynast ( women of Brindavan)

LORD KRISHNA IS BORN
many many great poets
were born

LORD KRISHNA IS BORN
The strength of Pandavas
started to multiply

LORD KRISHNA IS  BORN
Draupathi 's devotion/faith
is revealed to the whole Universe

LORD KRISHNA IS BORN
Before the great war of Gurushetra
BHAGAVATH GEETHA
is given to us !!!!!!!!!


No comments:

Post a Comment