Friday, January 31, 2014

எனக்காக நீ .....( Romance

முத்தாரம் ( pearl necklace ) நானும்  கேட்கவில்லை  உன் அன்பு
முத்தங்களைச்  சரமாக எனக்கே  கொடுத்தால்

பட்டாடை  ஏதும்  கேட்கவில்லை  என்
பட்டுக் கன்னத்தில் உன் அதரங்களை  பதித்தால்

சொத்தாக எதையும் கேட்கவில்லை  --நீ எனை உன் 
சொத்தாக நெஞ்சோடு அள்ளிக் கொண்டால்

இவை எல்லாம் இல்லை  என்று  நீ மறுத்தால் 
இவ்வுலகில் நான்  இருந்துதான் என்ன பயன் 


கற்பனை  உலகு சென்று   கவி படைத்தாலும்  நான்
காலை ஊன்றி நிற்பது   இப்புவிமேல்தான்

கடவுள் காட்டியவைகளைத் தான் கேட்கிறேன் நானும்  உன்
கருணைக்கும் பஞ்சம்  ஏனோ

இயற்க்கைக்கு புறம்பானது இல்லை இவள் கேட்பது
 இதை இறைவனும்  ஒப்புக்கொள்வான்  மறுக்காது


காதலும் கடவுளும் ஒன்றல்லவோ  இதில் உனக்கு
கருத்து மாற்றமும்  ஏனடா  என்  காதலா.............





  

No comments:

Post a Comment