Tuesday, February 22, 2011

மகத்துவம்

ரோஜா மிக அழகான மலர்
வாசம் கொள்ளையாகக் கொண்டது
பார்ப்பவர் எல்லோரும்
பறிக்கத் துடிப்பார் -அது
தன்னோடு முட்கள் கொண்டது
ஏன் என்று கேட்க முடியாது --இது
இறைவன் படைப்பு
காரணம் இருக்கத்தான் இருக்கும்
மலரை குறை கூறாதே
உனக்கு மலரை மட்டும்
பறித்துக்கொள்ளும் அறிவை அந்த
பரம்பொருள் கொடுத்துள்ளான்

அழகு ஆர்த்திக்க வேண்டிய ஒன்று
ஆண்டவன் அழகு மயமானவன் --அவனை
அழகை வைத்து ஆராதிக்கலாமே  
மலரை ஆசையோடுப்  பறித்து
உன் பக்தியோடு அதையும்
இறைவனடி சேர்
இறைவனடி சேர்வது மலர் மட்டும் அல்ல ---உன்
உடல் பொருள் ஆவி அனைத்துமே
மலரின் மகத்துவம் இது !

காரணம் நம் தேடலில்

ஜகன்மாதா அனைத்தையும் துறந்து தன்
நாயகனைத் தொடர்ந்தாள் கானகத்துக்கு
மானிட அவதாரம் எடுத்தவளாக

கானகத்தில் அவள்  கண்டது
பொன் மான்
ஆசை கொண்டாள் அதை அடைய
அழைத்தாள் தன் நாயகனை 

மானிட அவதாரம் எடுத்த
ஸ்ரீ நாராயணனும் சென்றான் அதை
கொண்டுவர உடனே
செய்வது  தவறா சரியா என்ற
கேள்வி இருவரிடமும் எழவில்லை 
மானிட அவதாரத்தில் உள்ளதால்

லோக மாதாவும் எம்பெருமானும்
பூவுலகுக்கு வந்ததின் காரணம்
நன்கு அறிவர்
நாம் அறிவோமா நம் பிறப்பின்
காரணத்தை ?

நம் தேடலில்தான் காரணம் உள்ளது
கண்டிபிடிக்க வேண்டும் நிச்சியமாக 
இறைவனை மனதில் நிறுத்தி !



Monday, February 21, 2011

வாழ்வில் வலிகள் வரலாம் ---அவை
நாட்பொழுதில் ஆறிவிடும் ---ஆனால்
இழப்புகள் நேர்ந்தால் அதை
ஈடுகட்ட முடியாது எத்தனை
நாட்கள் ஆனாலும்
இழப்பு நேராதிருப்பது பல சமயம்
நம் கையில் இருப்பதில்லை
இழப்பு நேர்ந்தால் இறைவன்
ஒருவனைக் கொண்டே ஈடுகட்ட முடியும்
என்றும் இழக்க கூடாதது
ஈசனின் திருநாமம்
(சந்தோஷ ) வானில் பறந்தாலும்
(துயரக் ) கடலில் மூழ்கினாலும்
இருக்கப் பற்றிக் கொள்ள வேண்டியது
பரமனின் திருவடிகளை மனதில்
எந்த சுனாமியும் அடித்துச் செல்லாது
எந்த டோர்ணடோவும் அழித்து விடாது  நம்மை
பற்றிக்கொள்ள அவன் திருவடிகள் இருக்கையிலே
பற்றற்ற வாழ்வு பவித்திரம் ஆகிவிடும்

Saturday, February 19, 2011

நிறைவு divine )

தேடலில் நாம்   தேடவேண்டியது  அமைதியை

அமைதியில் நாம்  தேடவேண்டும்  அன்பை

அன்பில் நாம் தேடவேண்டியது  ஆண்டவன்

ஆண்டவனிடம் நாம் தேடலாம்  நம்  ஆத்மாவை

ஆத்மாவும் ஆண்டவனும் ஒன்றாகிவிட்டால்

நம் தேடல் நிறைவு பெற்றிடும் ! 

Thursday, February 17, 2011

எது வேண்டும்

இதயம் வேறு மூளை வேறு
ஆம்
மூளை காரணத்தை தேடும் சிந்திப்பதால்
இதயம் காரணத்தை தேடாது காதலிப்பதால்
சிந்திப்பது நல்லதா
காதலிப்பது நல்லதா
சிந்தித்தால் விடை கிடைக்கும்
காதலித்தால் அன்பு/அருள்/ஆனந்தம் கிடைக்கும்
விடை வேண்டுமா இல்லை
அன்பு/அருள்/ஆனந்தம் வேண்டுமா வாழ்வுக்கு

ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் முடியும்
இது மூளையின் வேலை
கண்டுபிடிப்பு ஆனந்தமும்  தரலாம்
அவஸ்தையும் தரலாம்

அன்பு  ஆனந்தத்தில்தான்   முடியும்  
இது இதயத்தின் வேலை

ஆண்டவன் ஆனந்தமயமாக இருக்கிறான்--அவனே
கேள்வியும் பதிலுமாக இருக்கிறான்
ஆராய்ச்சியில் சிக்காமல்
ஆனந்தத்தில் தத்தளிக்கலாமே !

Heart is different from mind9brain)
mind will look for reasons
as it thinks
heart sinply loves so
dont look for logics/reasons
is it good to think or
it is good to love ?
thinking gets u solutions
love gets you nice feelings,
get blessings,get happiness
do we need answers or
of haapiness ,love and blessings for life

doing research will bring findings
it is mind's(brain's ) job
Findings can bring joy
and it can bring sorrow also

But love will end only in happiness
It is heart 's job

God is personification of happiness
HE stands  the question as well the answer
Instead of getting into reasearch
let us float in the happiness



Tuesday, February 15, 2011

வேண்டும தாய் அகம்

பிறந்தது என் தவறல்ல பெருமானே
பிறவியின் பலனும் என் விருப்பம் அல்ல பெருமானே
பிறப்பும்   இறப்பும்  என் கையில் இல்லாத போது---- மறு
பிறவி ஒன்றை வேண்டுவதும் நான் அல்ல பெருமானே
வேதனையும் வேண்டவில்லை சுகத்தையும் வேண்டவில்லை
வேண்டுவது எல்லாம் கொடுக்க
வேலவன் நீ இருக்கையிலே பெருமானே
வேல் ஒன்று போதும் உன் மயில் ஒன்று போதும்
மனதில் கொள்ள
வேள்விகள் தேவையில்லை
விரைவில் நீ வருவது திண்ணம்
வேதனைகள் எனக்கில்லை பெருமானே
தாய் அகம் நான் செல்வேன் -சிறு
குழந்தையென தவழ்திடுவேன் -அங்கே எனை
குழந்தையென நிறுத்திக்கொள்ளும்  நெஞ்சினிலே !


Sunday, February 13, 2011

இறவா வரம் ( divine )

மண்ணில்
விதைத்தவை  எல்லாம் பயிராவதில்லை
பயிரானவை எல்லாம் கதிராவதில்லை
கதிரானவை எல்லாம் காயாவதில்லை
காயானவை எல்லாம் கனியாவதில்லை
கனிந்தவை  எல்லாம் சுவைப்பதும் இல்லை
சுவைத்தவை எல்லாம் ஜரிப்பதும் இல்லை
எப்படி
மொட்டுக்கள்  எல்லாம்  மலர்வதிலையோ
மலர்ந்தவை எல்லாம் மணம் பெறுவதில்லையோ
மணம் பெற்றவைஎல்லாம்
இறைவனை அலங்கரிப்பதில்லையோ
அப்படியே
மண்ணில்
பிறந்தவர் எல்லோரும்
பிறந்தவர் ஆவதில்லை ------ ஆனால்
பிறந்தவர்  எல்லோரும் இறந்தவர் ஆவர்
ஒரு நாள் ----இங்கும்
தானும் வாழ்ந்து பிறரை வாழவைப்பவர்
இறைவனடி சேர்ந்தும்
இறவா வரம் பெறுவார் !





நட்பின் முட்கள் ( or புல்லுருவி )

பெண் உருவில் ஒருத்தியைக் கண்டேன்
அழகிய கண்களைக் கொண்ட அவளுக்கு
பழகவும் தெரியுமென நினைத்து
பழகும் நாட்களைத் தொடர்ந்தேன் ---அவளுடன்
அழகிய நினைவுகள் தொடருமென
தொடர்ந்தது நாட்கள் தான் ---ஆனால்
கசந்தது நட்பு ---நல்லவள் அவள்
உள்ளம்  உள்ளவள் என நினைத்தேன்
உள்ளம் அங்கு இல்லை ---வெறும்
பள்ளம் இருப்பதைத்தான் உணர்ந்தேன்
பள்ளம் முழுவதும் பொறாமை எனும்
முட்கள் நிரம்பி வழிவதையும் கண்டேன் ---வெறும்
பள்ளத்தில் விழுந்தால் வெளிக் காயத்துடன்
வெளிவரலாம் ----ஆனால்
முட்கள் நிறைந்த பள்ளத்தில் விழுந்தால்
முட்களும் நம்மை தொற்றிக்கொள்ளும்
முள்ளின் மேல் விழுந்த சேலையை
மெல்ல எடுப்பது போல
மெள்ள நகர்ந்தேன் பள்ளத்திலிருந்து
சேராத இடம் தன்னில் சேர வேண்டாம் என்
பெரியோர் அன்று சொன்னது இதுதானோ
முட்களை(பொறாமை ) என்னோடு அள்ளி வராது காத்த
 கடவுளுக்கு என் நன்றி உரித்தாகுக ! 

அதிஷ்ட்ட சக்கரம் (Wheel of fortune !)


வண்டி ஓட ரெண்டு சக்கரம் வேண்டும்
ரெண்டு சக்கரம் மட்டும் போதுமா ---அதைத்
தாங்க அச்சு ஆணி வேண்டும்
வாழ்க்கை என்பதும் ஒரு வண்டி போல்தான்
தாய் தந்தை என்ற இரு சக்கரம் தேவை ---அவர்களின்
ஒற்றுமையே வாழ்க்கையின் அச்சாணி --அந்த
அச்சாணி இல்லையெனில் வாழ்க்கையும்
தடம் புரண்டுவிடும் ---அதில்
பயணம் செய்யும் பயணிகளும் 
மூலைக்கு ஒன்றாக சிதறிவிடும்

ஒரு சக்கரம் தாங்கிய  வண்டி சற்று
சிரமத்துடன் தான் செல்லும்
தாயோ தந்தையோ மட்டும்
நடத்திச் செல்லும் வாழ்க்கையும்
இப்படித்தான்

குறைகளைக் கண்ட பயணிகள்
பயணம் முடிந்த பிறகு
சக்கரத்தை எட்டியும் உதைக்கலாம்
கடந்த தூரத்தை எண்ணி வியந்து
சக்கரத்தைப் போற்றிப் பாதுகாக்கலாம்

சக்கரம் ஒன்றோ இரேண்டோ ---அது
சுழலப் பிறந்தது ---பயணிகள்
இறங்கிவிட்டால் சக்கரம்
தன் வழியிலும் செல்லலாம்
தனி வழியிலும் செல்லலாம்

பயணித்தவர் பயணம் முடிந்த பிறகு
பாரம் சக்கரத்திற்கு அல்ல
சக்கரம் சுழலட்டுமே சந்தோஷமாக
அதிஷ்ட்ட    சக்கரமாக  என்றும் !


நானும் குழந்தையே

சிறுமி ஒருத்தி அருகில் வந்தாள்--தலையில்
குடுமி  ஒன்று அணிந்து இருந்தாள்
உரிமையோடு கையைப் பிடித்து
ஓடி ஆட அழைத்துச் சென்றாள்--என்
கண்களை மூடி ஒளிந்து கொண்டாள்
அவளைக் கண்டுபிடித்தால் --தன்
கன்னம் குழியச் சிரித்து நின்றாள்
சிறு குழந்தையென எனை நினைத்தாளே
மறு பிறவி ஒன்றைக் கொடுத்தாளே
கருணை கொண்ட  கடவுளும் என்னை
குழந்தையாக்கி நின்றானே !


Friday, February 11, 2011

தேடல்

தேடிச் செல்லவில்லை  எதையும்
தேடி வந்ததை கண்டு கொள்ள எண்ணி
தேடி வருவது  நிறைவு  பெறுமா (என்னிடம் )---எனைத்
தேர் கொண்டு அழைத்துச் செல்லுமா--- புதுத்
தேடல்கள் தொடங்கிடுமா
தெய்வங்களின் துணையோடு
தேவதை போல் நானும் மாறி
தெய்வத்தையே அடைவேனோ
(சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் போல் !)

Thursday, February 10, 2011

அவனே தவம் divine

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
நமக்குள் உள்ள அவனை
நாம்காணும் நிலையிலே

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
நமக்குள் உள்ள அவன்
நம்மை நாடி வருகையிலே

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
நம்மை அவன் தனக்குள்
அழைத்துச் செல்லும் அருளிலே

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
புவி ஏழும் உலவாது அவையெல்லாம்
அவன் உள்ளே காணுகையிலே

தவமே அவனாக இருக்கையிலே
பலிப்பதற்கு உளதோ ஏதும் !

Saturday, February 5, 2011

தேவதை ...

 
தேவதை
தேர்  கொண்டு வருக ---உன்
                                                           தேவதையை அழைத்துச் செல்ல
                                                          ஊர் முழுதும் உறவு சொல்லி மண.
                                                          மாலை  ஒன்றை  அணிய  வைத்து
                                                          பார் முழுதும் உலவிச் செல்ல
                                                          பாதையெல்லாம் மலர் தூவி
                                                          வான் போகும் நிலவும் நின்று
                                                          வட்டமிட்டு  இதைப் பார்க்க
                                                          வண்ண வண்ண பூக்கள்  எல்லாம்   காதல்
                                                          எண்ணங்கள் பல சொல்ல
                                                          கண்ணன் குழல் ஓசை காதோரம் கேட்டிட
                                                          மன்னன் நீ என்று   மகிழ்ந்திடா .



இதோ என் தேவதை


                                                        யார் உன்னைத்  தடுப்பது ---பலர்
                                                        நலம் பாடி நீயும்  வாழ

                                                     
                                                ........