Sunday, February 13, 2011

அதிஷ்ட்ட சக்கரம் (Wheel of fortune !)


வண்டி ஓட ரெண்டு சக்கரம் வேண்டும்
ரெண்டு சக்கரம் மட்டும் போதுமா ---அதைத்
தாங்க அச்சு ஆணி வேண்டும்
வாழ்க்கை என்பதும் ஒரு வண்டி போல்தான்
தாய் தந்தை என்ற இரு சக்கரம் தேவை ---அவர்களின்
ஒற்றுமையே வாழ்க்கையின் அச்சாணி --அந்த
அச்சாணி இல்லையெனில் வாழ்க்கையும்
தடம் புரண்டுவிடும் ---அதில்
பயணம் செய்யும் பயணிகளும் 
மூலைக்கு ஒன்றாக சிதறிவிடும்

ஒரு சக்கரம் தாங்கிய  வண்டி சற்று
சிரமத்துடன் தான் செல்லும்
தாயோ தந்தையோ மட்டும்
நடத்திச் செல்லும் வாழ்க்கையும்
இப்படித்தான்

குறைகளைக் கண்ட பயணிகள்
பயணம் முடிந்த பிறகு
சக்கரத்தை எட்டியும் உதைக்கலாம்
கடந்த தூரத்தை எண்ணி வியந்து
சக்கரத்தைப் போற்றிப் பாதுகாக்கலாம்

சக்கரம் ஒன்றோ இரேண்டோ ---அது
சுழலப் பிறந்தது ---பயணிகள்
இறங்கிவிட்டால் சக்கரம்
தன் வழியிலும் செல்லலாம்
தனி வழியிலும் செல்லலாம்

பயணித்தவர் பயணம் முடிந்த பிறகு
பாரம் சக்கரத்திற்கு அல்ல
சக்கரம் சுழலட்டுமே சந்தோஷமாக
அதிஷ்ட்ட    சக்கரமாக  என்றும் !


No comments:

Post a Comment