பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை என்பர்
நிறத்தில்
பாலுண்டால் பசியாறும்
கள்ளுண்டால் போதை ஏறும்
பசியும் மறுபடியும் வரும்
பால் அருந்த வேண்டும்
போதையும் தெளிந்து விடும்
கள்ளும் அருந்த வேண்டும்
பசியாறினால் போதுமே வாழ்வுக்கு
போதை வேண்டாமா உயிர் வாழ
பால் அருந்தி பசியாறி
இறைவனின் நாமம் உச்சரித்து
அந்நிலையில் இருக்கலாம்
No comments:
Post a Comment