Friday, April 22, 2011

நாளையின் நம்பிக்கை (social)

தாயும் பிள்ளையும் ஒன்றானாலும்
வாயும் வயிறும் வேறு
இது பழமொழி
தாயின் கருவறையில்  உள்ளபோதே
இந்நிலை வந்து விடுகிறது 
 பிறந்த பின்
தாய் பாலூட்டுகிறாள் சீராட்டுகிறாள்
சோறு ஊட்டுகிறாள் தன்
இடையில் இடுக்கிக்   கொண்டு --அவன்
போகும் திசையெல்லாம் இவள் நடை --அவன்
உறக்கமும் இவளின்  விழிப்பு 
காலங்கள் கடக்கிறது ---தன்
கோலங்களை காட்டி 

தாரம் தேடும் தருணம் மகனுக்கு 
தாரை வார்த்து தருகிறாள் தாயும் --உடன் 
தாய் தூரத்து சொந்தம் ஆகிறாள் 
என்ன விந்தையடா  இது ???
உறவுகள் வளர்ந்தால் தான் அது
உறவாகும்
முறிந்தால் அது முடிவாகும்

செடிகள் சிறந்து தழைக்க
பூத்து மலர
காலங்களின் நிலைக்கு ஏற்ப அதை
கத்தரித்து விட்டு வளர்ப்பார்
உறவுகளும் காலப்  போக்கில்
சிதைந்து போகும்போது
சற்று விலகிப் போனால்  மறுபடி
தழைக்கலாம்
பூத்து மலரலாம்

நம்பிக்கை தானே நாளை !!!




No comments:

Post a Comment