ஓடி விளையாடு பாப்பா என்ற
பாரதியின் கவிதையை மனதில்
கொண்டேன் இன்று
ஓடி விளையாடி உலகக் கோப்பையை
கையில் ஏந்திய கிரிக்கெட் வீரர்களைக்
கண்டேன் இன்று
கோடி கோடி மக்களின் கொள்ளை ஆசையை
பூர்த்தி செய்த கம்பீரக் குழந்தைகளை
வாழ்த்தினேன் இன்று
விளையாட்டோ உண்மை வாழ்வோ
எங்கும் எதிலும் எல்லோருக்கும்
வெற்றி கிடைக்க வணங்கி நிற்ப்போம்
பூலோக மாதாவை !!!
No comments:
Post a Comment