கண்ணன் பிறந்தான் இன்று
பிருந்தாவனம் எங்கும்
தேவ கானம் இசைக்க
கண்ணன் பிறந்தான் இன்று
பல கோடி தேவர்களின்
கவலை மறைய
கண்ணன் பிறந்தான் இன்று
பல கோடி உள்ளத்தில்
குறும்பு பிறக்க
கண்ணன் பிறந்தான் இன்று
வெண்ணை என பக்தியில் உருகிடும்
உள்ளங்கள் களவு போக
கண்ணன் பிறந்தான் இன்று
கயவர் மனமெல்லாம்
பயத்தில் கலக்கம் கொள்ள
கண்ணன் பிறந்தான் இன்று
யமுனா நதிக்கரையிலே
காளிங்க நர்த்தனம் நடத்த
கண்ணன் பிறந்தான் இன்று
மாமுனிகளும் மதி மயங்கி
அழகில் மோகம் கொள்ள
கண்ணன் பிறந்தான் இன்று
பக்தர்கள் உள்ளமெல்லாம்
பரவசம் கொள்ள
கண்ணன் பிறந்தான் இன்று
பல கோடி கோபிகர் நெஞ்சில்
காதல் கரை புரள
கண்ணன் பிறந்தான் இன்று
நல்ல எண்ணம் கொண்ட
கவிகள் பிறக்க
கண்ணன் பிறந்தான் இன்று
பாண்டவர் பலம்
பன்மடங்கு பெருக
கண்ணன் பிறந்தான் இன்று
பாஞ்சாலியின் பக்தி
பார் முழுதும் பரவ
கண்ணன் பிறந்தான் இன்று
பாரதப் போருக்கு முன்
பகவத் கீதையை நமக்கு அருள .................
LORD KRISHNA IS BORN
The whole of Brindavan
Filled with Divine music
LORD KRISHNA IS BORN
Worries of millions of
Divine people disappeared
LORD KRISHNA IS BORN
Playfullness filled
millions of heart
LORD KRISHNA IS BORN
All the hearts that melt
like butter got stolen Him
LORD KRISHNA IS BORN
All the people with
criminal mind got scared/tensed
LORD KRISHNA IS BORN
The dance of Kalinga performed
at the bank of river Yamuna
LORD KRISHNA IS BORN
EVEN the great sages
fell in love with Beauty
LORD KRISHNA IS BORN
Peoples hearts are
filled with Divinity
LORD KRISHNA IS BORN
Love started to flow
in the hearts of Gopikas
the women of Yadava Dynast ( women of Brindavan)
LORD KRISHNA IS BORN
many many great poets
were born
LORD KRISHNA IS BORN
The strength of Pandavas
started to multiply
LORD KRISHNA IS BORN
Draupathi 's devotion/faith
is revealed to the whole Universe
LORD KRISHNA IS BORN
Before the great war of Gurushetra
BHAGAVATH GEETHA
is given to us !!!!!!!!!