Sunday, December 7, 2014

முக்தி நிலை

இறைவா
எனக்குள்  குழந்தை  நீ
எனக்குள்    தாய்மை   நீ 
எனக்குள்  கலை  நீ
எனக்குள்   மகிழ்வு  நீ 
எனக்குள் அறிவு  நீ 
எனக்குள் அன்பு   நீ 
எனக்குள் கருணை  நீ 
எனக்குள் நன்மை   நீ 
எனக்குள் ஒளி  நீ
எனக்குள் ஒலி  நீ 
எனக்குள் உயிர் நீ
எனக்குள் அனைத்துமாகிய  
உனக்குள்   நான்    எப்போது ...............


 

Tuesday, July 29, 2014

mirror,river and a flower ..............

I am like a Mirror

when you look at me
with a smiling face
I will give back that smile
beautifully to you

when you wear an ugly frown
in front of me
I have no other choice but
to give back the same
to you how ever smart you are .......

I am like a Mirror
I just reflect what you are in
front of me

If you throw a stone at me
in anger
I instantly break into pieces
But to clear all the pieces
It will NOT only take your whole
energy but it is you
who will get hurt badly and start bleeding

I am like a Mirror
Once broken into pieces
remain that way .............

I am like  a Mirror 
I don't own any identity  
I don't take away anyone's
identity
I only reflect always
what you are

I am like a River .
I flow in crystal clear
running down from the
mountain   dancing  and
singing happily all my  way
where ever I have to go


I am like a River
If I find  any obstruction
on my way
I don't mind it  and
keep moving as always
singing and dancing
all the way to
where ever I need to go

I am like a River
When you throw dirty things
on me
I wont get dirty as
I leave all the dirt behind and
 keep running singing
 and dancing happily
all my  way to
where ever I have to go

but it is you who will take
a dirty reflection of yours
on the river
with all the dirt your throw
on me

I am like a River
When you worship me and
take a dip in me to
have bath
I will remove all your
outer and inner dirt as well

I am like a River
When  I remove  your dirt
I don't get dirt
I remain pure and
keep flowing all the way
to my destination

I am like a Flower
when you keep me
in your garden
I make the place 
beautiful for you

I am like a flower

when you keep me
in your room
I spread all the nice
aroma  around  you
 to feel so divine

I am like a flower

when you keep me
in your Altar
I give you salvation

What else you want ...................


 

Monday, July 21, 2014

தர்மம்

கணவன்  மனைவியாக
வாழ்வை   துவங்க     கண்ணகியை
விட்டு  பொருள்   ஈட்டத்தான்
விலகிச்  சென்றான்   கோவலன்


மாதவியின்  கலையின்   அழகில் 
அவன்   கட்டுண்டான்   விதிவசத்தால்
இடையில்  விளையாடியது  
மாதவியின்   தாயெனும்
பேராசைப்   பேயின்   சூட்சமம்

பொருளனைத்தும் இழந்து வந்த
கணவனுக்கு  தன்  மாணிக்க
கொலுசு  ஒன்றை  கொடுத்து
 அனுப்பிவைத்தாள்  வாழ்வை  சீராக்க

பாண்டிய    மன்னனோ
கோவலனை   குற்றவாளியாக்கி
கொலை செய்ய ஆணை  இட்டான்
 சிகை  அறுத்து

கண்ணகி நீதிதவறினான்  மன்னன்
என  சுட்டிக்கிகாட்டியதும்  தானே
வீழ்ந்து   மாண்டான்   மன்னன்
அங்கே சத்தியம்  உயர்ந்து நின்றதால்

கொலையுண்ட கணவனை உயிரோடு
மீட்டியது கண்ணகியின்
கற்பு எனும் தர்மம்

அவனை உயிர் பெற்று எழவைத்தது
கட்டிய மனைவியை மறந்து
வேறொரு பெண்ணின் அழகிலும்
கலையிலும்  மயங்கி மாண்டாயே
என  கேட்கவில்லை ; அங்கே  அவள்
பெண்மை உயர்த்து நின்றதால் ... பின்

அவளின்    கற்பு   எனும்  தர்மம் ஆவேசம்
கொண்டதால்  மதுரை  மாநகரே
இரையானது அக்னி தேவனுக்கு 
அங்கே வீற்றிருக்கும் அற்புத
சக்தியான அன்னை மீனாக்ஷி உடனே
அவளை  ஆட்கொண்டாள்

கண்ணகி  கதையைச்  சொல்லி
பெண்ணுக்கு  கற்பை  
பாடமாக்க   வேண்டாம்  ; கண்ணகி
படைத்தது   காவியமல்லவோ

கற்பு  என்பது  ஒரு  தர்மம்
மாபெரும்   சத்தியமும்  ஆகும்  அது
சத்யம் காப்பது ஆண் பெண்  இருவருக்கும்
சம   பங்கு   ஆகும்    வாழ்வினிலே





Monday, June 30, 2014

இந்த குழந்தையாக நான் இருக்க கூடாதா  என்று இதை பார்த்ததும்  என்  மனம்
இன்று ஏங்கியது .

அப்படி இருந்தால் தூக்கமும் , இந்த  அரவணைப்பும் எத்தனை  இதமாக இருக்கும் 
என்று ஒரு கற்பனை

கற்பையே இனித்தது என்றால் உறவின் பெயரால் வந்த உறவு அணைத்தால்  எப்படி
என்று மனம் துள்ளியது

ஐந்து அறிவு கொண்ட ஜீவன் கொடுக்கும் அணைப்பு ஆறறிவு கொண்ட என் கற்பனையையும் 
மிஞ்சிய ஒரு படைப்பே

 

Friday, January 31, 2014

எனக்காக நீ .....( Romance

முத்தாரம் ( pearl necklace ) நானும்  கேட்கவில்லை  உன் அன்பு
முத்தங்களைச்  சரமாக எனக்கே  கொடுத்தால்

பட்டாடை  ஏதும்  கேட்கவில்லை  என்
பட்டுக் கன்னத்தில் உன் அதரங்களை  பதித்தால்

சொத்தாக எதையும் கேட்கவில்லை  --நீ எனை உன் 
சொத்தாக நெஞ்சோடு அள்ளிக் கொண்டால்

இவை எல்லாம் இல்லை  என்று  நீ மறுத்தால் 
இவ்வுலகில் நான்  இருந்துதான் என்ன பயன் 


கற்பனை  உலகு சென்று   கவி படைத்தாலும்  நான்
காலை ஊன்றி நிற்பது   இப்புவிமேல்தான்

கடவுள் காட்டியவைகளைத் தான் கேட்கிறேன் நானும்  உன்
கருணைக்கும் பஞ்சம்  ஏனோ

இயற்க்கைக்கு புறம்பானது இல்லை இவள் கேட்பது
 இதை இறைவனும்  ஒப்புக்கொள்வான்  மறுக்காது


காதலும் கடவுளும் ஒன்றல்லவோ  இதில் உனக்கு
கருத்து மாற்றமும்  ஏனடா  என்  காதலா.............





  

Tuesday, January 21, 2014

காவியம் படைக்கலாமே ( romantic poem)

தலை அணைகள் சேர்ந்து இருந்தாலும்
பல கட்டில்களில் 
நினைவலைகள்  வேறுபட்டு இருக்கும் 
தம்பதிகளிரிடையே 

நினைவுகள் ஒன்றாக இருந்தாலும் 
நீயா நானா நிகழ்வில்  இருப்பார் 
இருவருமே 

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை 
வீரத்தின் அழகல்லவா 
கட்டிலில் ஜெயித்தவர்கள் 
காவியம்  படைப்பவரே 

Monday, January 20, 2014

அற்புதம் நிகழ .......(social)

கட்டிய  மனைவி
கண் எதிரே  இருக்கையிலே
 கண்டதையும்  தேடுகிறான்
 மணிக் கணக்காக
கணவன்
கணிப்பொறிப்  பெட்டியிலே


விஞ்ஞான வளர்ச்சியில்
கற்ற விதைகளைக் கொண்டு
வெற்றிகளை  குவிக்கணும்
பதிலாக
கேள்விகளால் வாழ்க்கையை
நிரப்பலாமா

குடும்பம் கோவில் ஆனால்
நட்சத்திர மண்டலமும்
வீடு புகும்   ராக்கெட் இல்லாமல்

ஆராய்ச்சியால் அறிவை
பெருக்கணும்
அறியாமையை தவிர்க்கணும்

அறியாமை  நீங்கின் அங்கே
அற்புதம்  நிகழும்