பரந்த
வானமெங்கும் கருத்த மேகக் கூட்டம்
கரு
மேகங்கள் அணைத்துக்கொள்ள அங்கே
வெட்டி அடிக்கும் மின்னலின் ஓட்டம்
பின்பு
வருகின்ற மழைத் தூறலின் ஆட்டம்
இவை
அனைத்தையும் ரசித்து நின்ற என் மனதின் சத்தம்
அந்த
சத்தத்தில் வந்த வார்த்தைகளின் வண்ணம்
இந்த
வண்ணங்களில் வழிந்தோடும் எண்ணம்
இவை
எல்லாம் படைத்த அந்த இறைவனின் சூட்சமம்
ஆஹா
புவியில் இன்பங்கள் பொய் அல்லவே
No comments:
Post a Comment