சிட்டுக் குருவிகள் சிறகடித்து பறக்க
சிங்காரத் தோட்டத்தில் அமர்ந்தேன்
பட்டாம்ப் பூச்சிகள் வட்டமிட
பல வண்ணங்களைக் கண்டு வியந்தேன்
மெத்தென்ற புல்வெளி மேல் நடக்க
மேனி சிலிர்த்து மயங்கி நின்றேன்
பட்டான மேனியில் தென்றல்
தொட்டு போகக் கண்டேன்
சுற்றம் சூழலை மறக்க இந்த
சின்ன சின்ன இன்பம் போதுமே
No comments:
Post a Comment