மயில் தோகை ஒன்று கண்டேன்
மால் மருகன் நினைவில் வந்தான்
மழை தரும் கரு மேகம் கண்டேன்
மாதவன் குழல் இசைத்தான்
மழலைச் செல்வத்தைக் கண்டேன்
மனதில் ஒரு மயக்கம் கண்டேன்
மயங்கிய நிலை கொண்டு நான்
மனம் நிறைந்து துயில் கொண்டேன்
Images
I saw a peacock feather
came in my thought was Lord Vishnu's nephew
Saw the dark rainy cloud
came in the air was the flute music of Lord Madhavan
Saw the little ones
I mind felt so thrilled
with that beautiful feeling
got so filled ,went to sleep
மூன்று தெய்வங்களின் துணையோடு கவிஞர் நிறைவு அடைகின்றார். குழந்தையும் தெய்வம் தானே?
ReplyDeleteஅன்புள்ள திருமதி சுமதி அவர்களுக்கு
ReplyDeleteஉங்கள் கவிதைகள் கண்டு வியந்தேன்.
இது ஏதோ கற்பனையில் பிறந்தது அல்ல
உள்ளத்திலிருந்து மிக மிக ஆழமாக வந்துள்ள ஒரு வெளிப்பாடே.
தலைப்பும் அருமை, கருத்துக்களோ அதைவிட அருமை!
நான் தங்களைக் கண்ட அந்தக் கால நினைவுகளை நினைத்து வரையும் ஒரு கடிதம்.
அன்றொருநாள் கரு வேப்பளைக் கொத்தாக உள்ள உயிரினும் மேலான தங்கள் மகனுடன் எங்கள் இல்லம் வந்தீர்கள்.
வந்ததும் எந்த வித சலனமும் இன்றி புன்முறுவல் பூத்தவண்ணம் இருவரும் வந்ததும் எங்கள் இல்லத்தில் வசந்தம் பிறந்தது
அன்றே நான் கண்ட அந்த காட்சிகள்தான் தற்போது உங்கள் கவிதைகளாக வெளி வந்துள்ளது.
நம்பிக்கையின் பலன் அழகு
அவன் ஒருவனே வெற்றி படைப்பாளி
நகை காட்சிகள்!!
இதுதான் உங்கள் படைப்பு?
தாங்கள் ஒரு படைப்பாளி
ஆனால் முழுவதும் இறைவனுக்கே என்று தங்களை அர்ப்பணித்த மாபெரும் வெற்றி பெற்று விட்டீர்கள்!
வளர்க உங்கள் புகழ், நீடுடி வாழ்க உங்கள் படைப்பு!
வந்தே மாதரம்
அரிமா மருத்துவர் சேகர்