Tuesday, May 22, 2018

அன்பே வெற்றி

                                           அன்பே  வெற்றி

தன்னந்தனியாக  நடந்தன  என்  கால்கள்
அந்நிய  தேசத்திலே  ஒரு நாள்
காலைக்  கதிரவனின் கதகதப்பில்

தனியாக  நடந்தவை என் கால்கள் மட்டும் அல்ல  என்
மனமும் தான்   ; அங்கே
எண்ணம் ஆயிரம்  இருந்தனவேயன்றி  அவைகளுக்கு
வண்ணம் பூச  கூடவே  ஒரு துணை   இல்லாததால்

இடறி  விழுந்தேன்  கல்லொன்று தடுக்க
கால்  தடுமாறி  நடக்கையிலே
துணையொன்று   கைக் கோர்த்து  வந்திருந்தால்
இடையூறு   இப்படி  வந்திருக்குமா ? எழ
இயலவில்லை  உடனே   உள்ளச்சோர்வு
உடலைத்  தாக்க  ; அத்தருணம்

அன்புக்  குரல் கொடுத்தாள்
அந்நாட்டுச் சிறுமி  ஒருத்தி
ஓடும்  வாகனத்திலிருந்தபடியே  _ என் மீது
அக்கரைக்  காட்டி

கோலென பற்றிக்கொண்டது  அவள்
அன்பை  என் மனம்  பின்
எண்ணங்கள்   வண்ணமயமாக
உற்சாகம் பெற்றது உடலும்
எழுந்தேன்  தொடர்ந்தேன்  நடையை

அன்புக்கு  ஏது  அன்னியம்
அன்புக்கு   ஏது  அடைக்கும் தாழ்
எம்மதமும்  எம்மொழியும்
எந்நாடும்  சம்மதமே  அன்புக்கு
அன்பே வெற்றி அல்லவோ

 

Sunday, May 20, 2018

பற்று வேண்டுமே

                                                  பற்று வேண்டுமே

பற்றிக்  கொள்கின்றன   ஒன்றை
கொடிகள்  அவை    பூமியில்
வளர்ந்து பூத்து குலுங்க  - நாமும்

பற்ற  வேண்டுமே  என்றும்
நற்பண்புகளை   உலகில்
சிறப்போடு  வாழ

பற்ற  வேண்டுமே  என்றும்
அற்புத கலைகளை  மனதில்
கலாச்சாரத்தோடு  வாழ

பற்ற  வேண்டுமே  என்றும்
பற்றிலா  வாழ்வை   நினைவில்
இறைவனோடு  வாழ

பற்ற  வேண்டுமே  என்றும்
பற்று அற்ற இறைவன் தாளை
அவனோடு இரண்டற கலக்க  

Friday, May 18, 2018

தெய்வீகம்


                                                 தெய்வீகம்

பெற்றோர்களே  !
பிள்ளைகளுக்கு   அன்பை   காட்டி
பண்பை  கற்பியுங்கள்
சொத்துக்களை  குவித்து
அன்பை    விலைபேசாதீர்கள்

பெற்றோர்களே
பிள்ளைகளுக்கு   அன்பைச்  சொல்லி
தர்மத்தை  கற்றுக்கொடுங்கள்
நாடு   பிற்காலத்தில்  சிறந்த
தலைவர்களைப்   பெறும்   

பெற்றோர்களே  !
பிள்ளைகளுக்கு   அன்பை  ஊட்டி
கலைகளை   வளருங்கள்  மனதில்
கலைகள்  வளர்ந்தால்
கற்பனை வளம்   பெறும்

பெற்றோர்களே !
பிள்ளைகளுக்கு   அன்பை  நீட்டி
கைத்தொழிலை   கற்றுக்கொடுங்கள்
கைத்தொழில்  கற்றால்
கலாச்சாரம்   பெருகும்

கலாச்சாரம்   பெருகினால்
நாடு வளம்  பெறும்
நாடு வளம் பெற்றால்
குற்றங்கள்   குறையும்
குற்றங்கள்   குறைந்தால்
தெய்வீகம்  குடிகொள்ளும் 

Wednesday, May 16, 2018

                                 வெற்றிகள்  காணலாம்

உறவோடு   வாழ்ந்தால்
உரிமைகள்   பெருகி
உள்ளங்கள்   என்றும்  பொங்கும்

இரவோடு   உறங்கி
விடியலில்   எழுந்தால்
இதயங்கள்    வலுப்பெறும்

பசுமையோடு  வாழ்ந்தால்
இனிமை  கூடி
இளமையும்  நிலைக்கும்

அழுக்காமை    அகன்றால்
ஆனந்தம்   பெருகி
அமைதி   குடிகொள்ளும்

மயக்கத்தில்   தடுமாறாமல்
மதி கொண்டு வாழ்ந்தால்
மங்கலங்கள்  என்றும்  நிலைக்கும்

அமைதி தேடி அலையாமல்
இருப்பதில்   நிம்மதி  கொண்டால்
இன்பங்கள்   பெருகும்

விட்டுக்  கொடுத்து  வாழ்ந்தால்
வீரம் பெருகும்   வாழ்விலே
வெற்றிகள் குவியும் 

Tuesday, May 15, 2018

மாற்றங்கள்

                                                   மாற்றங்கள்

நதிகள்  எல்லாம்  தொலைத்தன  அதன்
நடையின்   ஜதிகளை   அங்கே
மணலில்  மேடைகள்  இல்லாததால்

சுத்தம்  செய்ய  பூச்சி கொல்லி   மருந்து
நித்தம் வருகிறது வீடு தேடி  தண்ணீராக
சத்தம்  இன்றி மறைத்தன  வீட்டுக்  கிணறுகளும்

மனிதன்  தொலைக்கிறான் தன் ஆயுளை
காற்று சீரமைப்பு பெட்டி  அறையிலே
அண்ணார்ந்து  பார்க்க  வானம் இருப்பதையும்  மறந்து

ஓடுகிறான்   ஒவ்வொரு  நொடியும்  மனிதன்
அண்மையில்   இருப்பவையெலாம் இருளென விலக்கி
ஓடுவது எதை நோக்கி என விளங்காமல்

மாற்றங்கள் தான்  நிரந்தரம் எனில்
மானிடனும்   ஏற்கலாமா  இம்மாற்றங்களை
மாறுபடுகிறதே  இதனால் மானிடன்  மனமும் 

Monday, May 14, 2018

கோடை மழை

                                            கோடை   மழை

கடலோரத்தில்   காற்று அழுத்தம் பெற்றதே
சாரால்  என    மழையும்   வந்ததே
தரையில்   மரக்கிளை  தவழ்ந்ததே
காற்றும்    பலமாக   வீசவே
இடிகள்   வானில்   முழங்கவே
மின்னலும்  பூமிக்கு  இறங்குதே
செய்திகள்    வானொலியில்   ஒலிக்குதே
துளிகள்    தரையில்   விழுகையிலே
கோடை மழையும்   கொட்டுதே
நதிகள்  யாவும் நிரம்பவே
செழுமை கண்ணில் தெரியுதே    இவ்
வையகம்   சொர்க்கம்    ஆகவே  ..................................

Wednesday, May 9, 2018

காதலே கருணை

                                         காதலே கருணை

உருண்டு திரண்டு மிரண்டு 
வானில் ஓடும் கருமேகங்களே
பறந்து உயர்ந்து வளர்ந்த மலைமேல் மோதுவது
நீ அதன் மேல் கொண்ட
மோகத்தாலா , கோபத்தாலா  இல்லை உன்
 வேகத்தாலா
காரணம்  எதுவாக  வேண்டுமானாலும்  இருக்கட்டுமே    இதனால்
நீ  பொழிவது ஆனந்த கண்ணீரோ  ?
வானம் இறங்கி வந்து உன் காதலை
சொன்னதால் வந்ததோ  அது ?
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே

உனது கருணையில்  நனைந்த எங்கள் ஜீவன்
 உன்னை வாழ்த்தி நிற்கிறதே _  இந்த
 புவிமேலே   நீ
உன் காதலை மீண்டும்  மீண்டும் சொல்லவே
வேண்டி நிற்கிறோம்  
காதல் என்றும்  கருணை பொழியுமே...............


 

போற்றுங்கள் பெண்மையை

                                    வாழை அடி  வாழை

வாழையடி    வாழையாக   என
வாழ்த்துவர்   மக்கள்
மண  மக்களை ....

வெட்ட     வெட்டவளருவது  வாழை
பெண்ணும்  வாழை போல் தான்     பலமுறை
வெட்டப்பட்டாலும் வாழ்விலே
மீண்டும்   மீண்டும்   வளர்கிறாள் உயர்ந்து

மங்கள நாண்  அணியாவிட்டாலும்
மணவாளன் அரவணைப்பு  இல்லாவிட்டாலும்
பெண் வாழ்கிறாள்வ உயர்கிறாள் வாழ்விலே

வாழா  வெட்டியாகவும்  அல்ல
வாழ்வில் வெட்டியாகவும்  இல்லை  பெண்

வாழை தோரணம் இல்லா
கல்யானமா
வாழை இலை  இல்லாத
விருந்தா
வாழைப் பழம் இல்லா
தாம்பூலமா

வாழை என்றாலே மங்கலம்
வாழ்வு என்றாலும்  மங்கலம்  ...பெண்
எங்கு வாழ்கிறாளோ  அங்கே   மங்கலம்
என்றும் பெண்மையை போற்றுங்கள் ...................

காதல் பேசுதே

பாரதி சொன்னன் அன்று தன்
காதல் கவிதையிலே
 
வீணையடி நீ எனக்கு
வெறும் விரல் நான் உனக்கு என  ...
 
காதல் என்னை பேசவைத்தால்
நானும் சொல்வேன்
 
செல்லம் நான் அவனுக்கு --என்னுள் ஒரு   
வண்ணம் அவன்  எனக்கு
 
என்  கன்னம்  அது  அவனுக்கு 
இந்த எண்ணம் இதில் 
சிவந்த வண்ணம் அது எனக்கு
 
என் மன்னன் அவன் எனக்கு  --என் 
 உள்ளம் அது அவனுக்கு
 
புத்தம்  புது மலர்  நான்  அவனுக்கு 
மலர்  சேரும் தெய்வம் அவன்  எனக்கு
 
குளிர்ந்த நிலவு நான் அவனுக்கு --நான் 
உலவி வரும் பரந்த வானம் அவன் எனக்கு
 
என்  அழகு  அது எல்லாம் அவனுக்கு
அவன் அறிவு அவை யாவும்  எனக்கு

வண்ணம்  நிறைந்த  எங்கள் வாழ்வினிலே  - நல்ல  
எண்ணம்  உதயமாகும்  இதயம் தனிலே   ..........

 


மனமும் மிதந்ததே

வான்   மேலே  நூறு மின்னல்கள்
பள  பள  என  ஜொலிக்க

கூரை  மேலே  பயங்கர இடிகள்
கட  கட  என  முழங்க
   
சாரல்  மழைத் தூறல்   என்  மேல்
சல  சல  என  விழுந்திட

சாலை யோர  பெரும் மரங்கள்
கல  கல  என  ஆடிட

தரை  மேலே  எனது கால்கள்
சிலு சிலு என  பதிந்திட

 காலின்  வெள்ளிக்  கொலுசுகள்       
ஜிலு  ஜிலு  என  இசைக்க

இன்ப இசையும் மழையும் இணைய
மனமே    மிதந்தது   படகு போல.... ..