தெய்வீகம்
பெற்றோர்களே !
பிள்ளைகளுக்கு அன்பை காட்டி
பண்பை கற்பியுங்கள்
சொத்துக்களை குவித்து
அன்பை விலைபேசாதீர்கள்
பெற்றோர்களே
பிள்ளைகளுக்கு அன்பைச் சொல்லி
தர்மத்தை கற்றுக்கொடுங்கள்
நாடு பிற்காலத்தில் சிறந்த
தலைவர்களைப் பெறும்
பெற்றோர்களே !
பிள்ளைகளுக்கு அன்பை ஊட்டி
கலைகளை வளருங்கள் மனதில்
கலைகள் வளர்ந்தால்
கற்பனை வளம் பெறும்
பெற்றோர்களே !
பிள்ளைகளுக்கு அன்பை நீட்டி
கைத்தொழிலை கற்றுக்கொடுங்கள்
கைத்தொழில் கற்றால்
கலாச்சாரம் பெருகும்
கலாச்சாரம் பெருகினால்
நாடு வளம் பெறும்
நாடு வளம் பெற்றால்
குற்றங்கள் குறையும்
குற்றங்கள் குறைந்தால்
தெய்வீகம் குடிகொள்ளும்
No comments:
Post a Comment