வெற்றிகள் காணலாம்
உறவோடு வாழ்ந்தால்
உரிமைகள் பெருகி
உள்ளங்கள் என்றும் பொங்கும்
இரவோடு உறங்கி
விடியலில் எழுந்தால்
இதயங்கள் வலுப்பெறும்
பசுமையோடு வாழ்ந்தால்
இனிமை கூடி
இளமையும் நிலைக்கும்
அழுக்காமை அகன்றால்
ஆனந்தம் பெருகி
அமைதி குடிகொள்ளும்
மயக்கத்தில் தடுமாறாமல்
மதி கொண்டு வாழ்ந்தால்
மங்கலங்கள் என்றும் நிலைக்கும்
அமைதி தேடி அலையாமல்
இருப்பதில் நிம்மதி கொண்டால்
இன்பங்கள் பெருகும்
விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
வீரம் பெருகும் வாழ்விலே
வெற்றிகள் குவியும்
உறவோடு வாழ்ந்தால்
உரிமைகள் பெருகி
உள்ளங்கள் என்றும் பொங்கும்
இரவோடு உறங்கி
விடியலில் எழுந்தால்
இதயங்கள் வலுப்பெறும்
பசுமையோடு வாழ்ந்தால்
இனிமை கூடி
இளமையும் நிலைக்கும்
அழுக்காமை அகன்றால்
ஆனந்தம் பெருகி
அமைதி குடிகொள்ளும்
மயக்கத்தில் தடுமாறாமல்
மதி கொண்டு வாழ்ந்தால்
மங்கலங்கள் என்றும் நிலைக்கும்
அமைதி தேடி அலையாமல்
இருப்பதில் நிம்மதி கொண்டால்
இன்பங்கள் பெருகும்
விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
வீரம் பெருகும் வாழ்விலே
வெற்றிகள் குவியும்
No comments:
Post a Comment