Tuesday, May 15, 2018

மாற்றங்கள்

                                                   மாற்றங்கள்

நதிகள்  எல்லாம்  தொலைத்தன  அதன்
நடையின்   ஜதிகளை   அங்கே
மணலில்  மேடைகள்  இல்லாததால்

சுத்தம்  செய்ய  பூச்சி கொல்லி   மருந்து
நித்தம் வருகிறது வீடு தேடி  தண்ணீராக
சத்தம்  இன்றி மறைத்தன  வீட்டுக்  கிணறுகளும்

மனிதன்  தொலைக்கிறான் தன் ஆயுளை
காற்று சீரமைப்பு பெட்டி  அறையிலே
அண்ணார்ந்து  பார்க்க  வானம் இருப்பதையும்  மறந்து

ஓடுகிறான்   ஒவ்வொரு  நொடியும்  மனிதன்
அண்மையில்   இருப்பவையெலாம் இருளென விலக்கி
ஓடுவது எதை நோக்கி என விளங்காமல்

மாற்றங்கள் தான்  நிரந்தரம் எனில்
மானிடனும்   ஏற்கலாமா  இம்மாற்றங்களை
மாறுபடுகிறதே  இதனால் மானிடன்  மனமும் 

No comments:

Post a Comment