Friday, December 16, 2011

வேண்டும் இவை யாவும் ( need )

தருவாய் தாயே
  வெப்பம் அது எனை
வேதனை செய்யா  நிலை என்றும்

தருவாய் தாயே
  குளிர் அது எனக்கு
குறை தராத நிலை என்றும்

தருவாய் தாயே
 மழையோ வெயிலோ எனை
வாட்டா நிலை என்றும்

தருவாய் தாயே
 குறைவோ நிறைவோ
மனம் எதையும்
வேண்டா நிலை என்றும் ...........................

Monday, December 12, 2011

அனைத்தும் விண்ணுக்கே ( wish 1 )

விண்ணுக்கு உயர்த்து என் எண்ணைத்தை
என் உயிர் தாயே அது
வீதியிலே சுற்றித்  திரிந்தாலும்

விண்ணுக்கு உயர்த்து என் உடலை
என் உயிர் தாயே அது
மண்ணிலே மாண்டு  மறைந்தாலும்

விண்ணுக்கு உயர்த்து என் உயிரை
என் உயிர் தாயே அது
மறுபடி மறுபடித் தோன்றினாலும் .............
..

Tuesday, November 22, 2011








விதவை எனும் வார்த்தையை
விறகு கட்டையாக்கி 
சிதையில் எறிந்திடு நிரந்தரமாக
அக்னிதேவன் மகிழ்ந்து உன்னை
மங்களம் உண்டாக
வாழ்த்தி நிற்பான்

பெண்ணே
தனி மரம் நிழல் தரலாம் ஆனால்
தோப்பு ஆகாது 
மலர் சூடி மங்களம் பூண்டு
மக்களை காத்து
மணம் பெற வாழப் பிறந்தவள் நீ
தயங்காதே
நல்லெண்ணம் இதயத்தில் ஏந்தி
குங்குமம் நெற்றியில்  சூடி
மணம் பெற்று வாழ 
புறப்படு

எங்கும் மங்களம் உண்டாகட்டும் !!!!!

A wise woman is one who raise herself spiritually very  high so that she never leaves her loving husband ......said by Sumathi Srivatsangam


நன்றி சொல்வோம் (Divine 2 !)

நன்றி சொல்லுவது
நல்லோர்களின் வழக்கம்
நன்றி சொல்லுவோம் நம்மை
நலமாக படைத்த நாயகனுக்கு
நன்றி சொல்லுவோம் நாம்
நலம்பெற  வாழ்வில் உயர்த்தியவர்க்கு
நன்றி  சொல்லுவோம் நம்மை
நலம் பெற வாழ வாழ்த்துவோருக்கு
நன்றி சொல்லுவோம் நம்மை
நலமாக காக்கும் நாட்டிற்கு
நன்றிகளை நாம் குவிப்போம்
நாள்தோறும்
நலன்கள் தானாக நமக்கு
நாள்தோறும் குவியும்

வண்ண மயமாக ( need /nature )


வானவில் பெண்ணே
வண்ணங்களைப்  பூசிக்கொண்டு
வானத்தை அலங்கரிக்கிறாயோ
வட்டமிடும் வண்ணத்துப் பூச்சி
உனைக்கண்டு தன்
வண்ணங்களை எண்ணிக்கொண்டு உன்
எண்ணங்களை எடை போட
வண்ணம் வானுக்குச் சொந்தமா
வாழும் இனத்துக்குச் சொந்தமா என மயங்க
வாழும் மானிடனின்
வாழ்வெல்லாம் வண்ணமயமாக மின்ன
வைபோகம் பொங்கட்டும்
வானவர்கள் வாழ்த்த !!!


Friday, November 18, 2011

எண்ணங்களே சக்தி ( power of thoughts )

எண்ணங்களே  உனது உயிர் சக்தி - உன்
எண்ணங்களுக்கு  சக்திகொடு மனதால்
எண்ணுவதெல்லாம்  நலமாயின்
எண்ணங்களெல்லாம் எல்லாம் உயிர் பெற்று

ஏற்றங்கள்  எங்கும் நிலைத்திடும்
ஏற்றங்களால்   உலகையே ஆளலாம்
ஏற்றங்களின்  நிறைவே இறைவன் பின்
எண்ணங்கள் எல்லாம்   இறைமயமே

Friday, June 24, 2011

பெண்ணே முரண்பாடு ஏன்

பெண் என்றால் பேயும் இரங்கும்---இது
பொன் மொழி
பேயுக்குக் கூட சிறந்த இதயம்
படைத்துள்ளான் இறைவன் ஆனால்
பெண்ணை பெண் தாக்குகிறாள்
பொறாமை  அவளிடம் கொந்தளிப்பதால்

எனக்கு எல்ல சுகமும் வேண்டும் ---மற்றவளுக்கு
எதற்கு சுகம் என்ற
எண்ணத்தை   சுட்டுப் பொசுக்கு இல்லையேல் அந்த
எண்ணமே உன்னை சுட்டுப் பொசுக்கி விடும்

இயற்க்கை பாரா  பட்சம் பார்க்கவில்லை
இறைவன் பாரா பட்சம் பார்ப்பதில்லை
இடையில் நீ யார்
இல்லை என்று மறுக்க
இன்பம் மற்றவளுக்கும் கிடைத்தால்

உன்னிடம் அவள் எதையும்
யாசிக்கவில்லை நீ
இழப்பதற்கு
அவளுக்கு இறைவன் அளிப்பதை
நீ யார் வேண்டாம் என
மறுப்பதற்கு

நல்லெண்ணம் ஏந்தி
நடை பயிலு ; இல்லையேல்
நலம் கெட்ட வாழ்வு
நாடி  வரும் உனைத் தேடி

பிறர் நலம் கருதி வாழ் உன்
பிறப்பின் பெருமை உயரும்
பிறப்பு உயர்ந்தால்  மறு
பிறவியும் இனிதாகும்

Even ghosts show sympathy to women
Goes a golden saying ; So
we know God has given better heart to them
But women attack women
Due to mere jealous

Should all the pleasure be mine
No one should have as much as I have
If that is your thought
Kill that right away otherwise
This very thought alone will
destroy you

Nature treats everyone equal
God has no partiallity
Who are you  Lady to say "no'
When another woman
Wants to enjoy life

She is not asking anything from you
 for you to lose
Then who are you to  reject
what God wants to give something
 to other woman

walk proud carrying good thoughts
in mind
Otherwise problems will come
on its own to you

Have good heart for
others welfare also
Your birth will glow
When your birth shines
Life will become Divine