Saturday, October 30, 2010

நான் அறிந்த பகவத் கீதை

மாடும் கன்றும் மயிலும் பறவையும்
மயங்கி நின்றனவாம் அன்று மாடு மேய்த்த
மாயவனின் புல்லாங்குழல் இசையில்

இன்று நாமும் மயக்கலாம் இப்புவியையே
புல்லாங்குழல் இசைக்க வேண்டாம் 
புரிதல் எனும் இசையை வளர்த்து

கோவர்தன கிரியையே தன் சுண்டு விரல் கொண்டு
உயர்த்தித் தூக்கி அணைத்துக் கொண்டான்
அதனடியில் அனைவரையும் --------புராணம் கூறுகிறது
கதை அல்ல அது நிஜம்தான் !

இன்று நாம் இருகைகளை விரித்து
அணைத்தால் போதும் அனைவரையும்
உள்ளம் தானாக மலை போல உயருமே

மனதில் புரிதலும்  அன்பும் இருந்தால் போதும்
இப்புவி நம் கையளவு ஆகிவிடும் --பின்
கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்
கனிவு நிறைந்த இதயத்தோடு


Cow ,calf , peacock and birds
gone into ecstacy when they  heard
the flute played by the handsome cowboy that day!
Today we can also make the whole world
go into ecstacy --- no need to play the flute
but playing the music of understanding (each other )
HE lifting the Govardhana Giri just by his little finger
at a great height  hugged all of them under it
giving the needed protection --- says the puranas
Not just a story  ....but very true
today  if we hug the world by opening our arms widely
That will do  for our
heart to raise like  a mountain
in joy!
When we have understanding and love
for the world
We can take the world into our palm
then we can touch it with our eyes
with heart full of love (kindness)

Sunday, October 24, 2010

சொக்கி நிற்கிறேன் ( social)

தங்கத்தை தீயிலிட்டால்    ஜொலிக்கும்
    சுத்தத் தங்கம்  கிடைக்கும்
சங்கடம் நிறைந்த வாழ்க்கைத் தீயில் விழுந்து --- இன்று
   சொக்க தங்கமாக நிற்கிறேன்
பதித்துக்கொள்ள ரத்தினங்கள் வேண்டாமா
     சற்று  யோசித்தேன் 
ரத்தினங்கள்  பதிக்க வேண்டுமானால் ---- நான்
    கொஞ்சம் கலப்படமாக வேண்டும்
ஆபரணங்கள் அழகுதானே ---- அதைக்கொண்டு
   ஆண்டவனையும்  அலங்கரிக்கலாமே
சிந்தித்த நிலையில் நிற்கிறேன் ----- விடை
    விரைவில் கிடைக்கும் என

                               Standing blissful !
gold when put on fire all impurities  goes off and
it becomes very pure and shines so beautifully
likewise I was put in the fire of difficulties of life
now I shine like the purest gold
wonder whether I need gems on me
to become an ornament
but then  I need to take some impurities ( as u know they can not make any ornament out of very pure gold )
After all ornaments are so beautiful
can decorate God also with them
Stay thinking about it with the hope
I  will get an answer soon ...........

Wednesday, October 20, 2010

நம்பிக்கையின் பலன்

சிப்பிக்குள் முத்து போல சில காலம் இருந்தேன்
என் உள்ளம் எனும் ஆழ்கடலில்
திடீரென திறந்து பார்த்த இறைவன்
புன்னகைத்தான்   ----   என்னே ஆச்சர்யம்
நான் ஒரு அணிகலன் ஆகிவிட்டேன்
வியந்தேன் மகிழ்ந்தேன் சிரித்தேன் --- அணிகலனான நான்
அவனின் மலர் பதங்களை அலங்கரித்தேன்
நம்பிக்கையின் பயன் தெய்வீகமோ
இதை விடச் சிறந்த பரிசு உண்டா  எனக்
கொடுக்க நினைத்தேன்     பலருக்கும் இதை
என்னுள் எழுந்த அமைதியில் ---- இரு கை
விரித்து உலகையே அணைக்க நினைத்தேன்
சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பேன்                            
என் இறைவன் துணையோடு !
   
                                        Fruit of faith
I lived like a pearl in its shell for some time
 in the ocean of my deep heart
all of a sudden God opened it and smiled at me
what a surprise
I became a jewel
felt so thrilled ,happy and laughed
I adorned myself  ( the jewel ) on his flowery feet
faith's benifit is so divine
Is there a prize better than this
so wanted to give to  many people the divinity  I  feel
with the peace that has come to me 
want to hug the whole world opening my hands so widely
Know I will get a chance ; till then I will wait
with my god's love !

Tuesday, October 19, 2010

அழகு

 கண்ணுக்கு மை அழகு
   பெண்ணுக்கு மென்மை அழகு
 கவிதைக்கு கருத்து அழகு
  முகத்துக்கு முறுவல் அழகு
உறவுக்கு உரிமை அழகு
  உள்ளத்திற்கு அமைதி அழகு
வாழ்வுக்கு துணை அழகு
  தாழ்வுக்கு பெருந்தன்மை அழகு
கற்றதில் பெற்றது அழகு
   கடவுளுக்கு கருணை அழகு
                            
                                                 Beauty
for eyes kajal is beautiful
for woman softness ( feminism ) is beautiful
for poem the meaning is beautiful
for face smile is beautiful
for relationship taking rights is beautiful
for heart peace is beautiful
for life companionship is beautiful
in  a fallen state magnanimity is beautiful
in learning what we get is beautiful
for god his kindness is beautiful

அவன் நம்மில் ஒருவனே

கைகள் இரண்டுதானே என
 ஒரு ஏக்கம் எனக்குள் ------ நம்மை
படைத்தவனுக்கோ பல கைகள்
பார்த்திருக்கிறோம் கேட்டு இருக்கிறோம்
கேட்டேன் அவனை  ஏனடா
 இந்த ஓர  வஞ்சனை என
நிறைய கைகள் கொடுத்தால்
நாமும் அவனாகி விடுவோமோ என
நினைத்தானோ ---இல்லையே
அவன் நம்மில் ஒருவன் --இதை
உணர்ந்தால் நாமும் அவனே !
                      He  is One among us !
we have only two hands ; just  thinking ...
because our Creator has many
we have seen and read about this
Asked Him why this partiality
did he think if he had given us many hands
would become God ?---- NO
because he is one among us --if  we
realise that we are also God!
 

Monday, October 18, 2010

வெற்றி ( social)

சும்மா இரு என்றேன்  மனதிடம்
    சேஷ்டை செய்   என்றேன் இதயத்திடம்
போராட்டம் எழுந்தது
    தூண் போல சும்மா இரு என்றேன் மனதிடம்
காத்தாடி போலப்   பற என்றேன் இதயத்திடம்
    பறந்த இதயம் தூணைப்  பற்றிக் கொண்டது
என்ன வினோதம் இது
     மனமும் இதயமும் ஒரே இடத்திலா ?
ஜெயித்தது நான் தான்  
    பறந்தேன் நானே வானத்தில் !

                   Success

 Asked  the  mind to keep quite  
   be mischief said to the heart
There started a confusion (war)
  Told the  mind to keep "still " like a pillar
Asked the heart to fly like a kite
  the heart flew like a kite and got stuck on the pillar
what an amazing thing 
   both heart and mind at the same place
the winner  I am
   flew on the sky !

Sunday, October 17, 2010

படைப்பாளி ( social)

வெட்டித் தள்ளுகிறான்
  கொட்டிக் கொடுத்து வாங்கியதை
பட்டுத் துணியில் ஒன்று
 பிட்டுத் துணியில் ஒன்று
குட்டைக்  கையுடன் ஒன்று
  மொட்டைக்  கழுத்துடன் ஒன்று
கொடுத்த அளவு ஒன்று
   வைத்த அளவு ஒன்று
புடவைக்கு சரியான பொட்டு இருக்கு
  ரவிக்கை இல்லையே
பொட்டிக் கடை வைத்தவனே
      பிரம்மன்  ஆகிவிட்டான்  
வியக்க வேண்டாம் யாரென்று
  விடை உங்கள் கையிலே
                  Brahma
Cutting it off carelessly
which was bought with so much money
one in silk cloth
one in bit cloth
one with short sleeve
one with no neck
Given was one size
what he  made was another size
having  a matching bindi (sticker one)
for the saree
but no matching blouse
A small shop-keeper becomes a Brahma
dont wonder who it is
you must know the answer !

Saturday, October 16, 2010

நகை ( social)

வெள்ளியை வேண்டியவள்   அதை
      வெளியே  வைக்க பயந்தாள்
தங்கத்தை வேண்டியவள்   அதனை
     பங்கம் வராது   வங்கியில் வைத்தாள்
வைரத்தை  வேண்டியவள்   அணியவே
     தைரியம் இழந்து இருந்தாள்
என் நகையும் வேண்டவில்லை நான் -- என்
     புன்னகை ஒன்றே போதுமென .........
                 
             Jewel
people who have jewellery  in silver
     afraid to keep them even  outside (u know silver things will go dark if u keep them outside ,that is one meaning )
people who have jewellery in gold
     want to keep them in bank for safety
people who  have jewellery in diamond
    scared  even to wear them
I never long for any  kind of jewellery
     as I feel my "smile" alone will do

காட்சிகள்

மயில் தோகை ஒன்று கண்டேன்
   மால் மருகன் நினைவில் வந்தான்
மழை தரும் கரு  மேகம் கண்டேன்
   மாதவன் குழல் இசைத்தான்
மழலைச் செல்வத்தைக்    கண்டேன்
   மனதில் ஒரு மயக்கம் கண்டேன்
மயங்கிய நிலை கொண்டு  நான்
  மனம் நிறைந்து துயில் கொண்டேன்
  
                     Images
I saw a peacock feather
  came in my thought was Lord Vishnu's nephew
Saw the dark rainy cloud
 came in the air was the flute music of Lord Madhavan
Saw the little ones
 I mind felt so thrilled
with that beautiful feeling
 got so filled ,went to sleep

Friday, October 15, 2010

ஞானம்

பிறரின் தோல்வியில் அவர்களின் வெற்றியை தேடுவேன்
  என் தோல்வியில் எனது வெற்றிக்கு ஏங்குவேன்
பிறரின் வெற்றியை நான் எனதாக கருதுவேன்
  என் வெற்றியை பிறர்க்கும் தர விரும்புவேன்
வெற்றியோ தோல்வியோ நமதோ பிறர்தோ
  எதையும்  இறைவனுக்கே அற்பணிப்போம்

Thursday, October 14, 2010

தெளிவு ( crystal clear ) divine

இரையைத் தேடி அலையலாம்  -----ஆனால்
   இறைவனை தேடி அலையவேண்டாம்
இரையை வெளியே தேடலாம் ----- ஆனால்
  இறைவனை உள்ளே தேடணும்
இரை உள்ளே சென்றால் உயிர் வாழ்கிறது
  இறையை வெளியே அனுப்பினால் உயிர் வாடுகிறது
இரையைப் பகிர்ந்து  கொள்ளணும்   ------ நாம்
  இறைவனையும் பகிர்ந்து கொள்ளலாம் !

                  crystal clear

Need to go in search of food ----   but
  No need to go in search of God
Food when  goes in soul lives
  God when let out soul suffers
Look for food outside  but
  Look for God inside
Can share the food  so
  Can be shared the God in us !

மழலைச் செல்வம் ( wealth of little ones)

குட்டிப்  பெண்  ஒன்று   எனைச்
   சுற்றிச் சுற்றி வந்ததே
கொள்ளை ஆசை கொண்டதனை
  கட்டித் தழுவ எடுத்தேனே
பட்டுக் கன்னம் இரண்டிலும்  நான்
  பதிய பல முத்தம் தந்தேனே
மெத்த மகிழ்ந்த   எனைக் கண்டு அது
  பூத்த புது மலர் போல் சிரித்ததே !

                                  wealth of little ones
a cute little girl came
round and round me
with so much love
I picked her up to hug
gave many kisses on her
soft silk-like cheeks
seeing me with so much joy
she laughed like a freshly bloomed flower !

என் கண்ணம்மா ( My darling ...)

கட்டித் தழுவிடும் கருமேகம்  --- அது
  கொட்டித் தழுவியது பூமியை
விட்டுப்  பிரிய மனமிலாது   ----- அது
  வெட்டி அடித்தது மின்னலை
பட்டுப்  புல்வெளி  மேலே  ------ கால்
  பட்டுச் சிலிர்த்தது  மேனியே
சிட்டுக் குருவியும் பாடிட ------- என்
  சிந்தைக்கு வந்தாயே கண்ணம்மா !

                      My darling ( My kannamma )
The dark clouds that crawl around the sky
   hug each other over flowing with love
 Pour down on the earth
   wetting all over
 As they dont want to leave
  send the lightning with joy
 I start walking on the soft lucious green lawn
  with bare foot
 My whole body shivers with happiness
     There I hear a littel sparrow singing
 You ,my love  come into my thought
    I stand there spellbound!

அழகிய கனவுகளுக்கு ஒரு இறை வணக்கம்

ஆனை முகத்தோனுக்கு  ஒரு அழகிய வணக்கம்
   அழகன் எனும் முருகனுக்கு ஒரு அன்பு வணக்கம்
அண்ணாமலை அண்ணலுக்கு ஒரு இனிய வணக்கம்
  அவனின் மனையாளுக்கு ஒரு அற்புத வணக்கம்
அழகிய கனவுகள் பல எனக்குள் வளர
    அழகிய தமிழில் அதை நான் வடிக்க
அவைகளை ஆசையோடு படிக்கும் அன்பர்கள்
    அனைவருக்கும் என் பணிவான வணக்கம் !