Friday, December 16, 2011

வேண்டும் இவை யாவும் ( need )

தருவாய் தாயே
  வெப்பம் அது எனை
வேதனை செய்யா  நிலை என்றும்

தருவாய் தாயே
  குளிர் அது எனக்கு
குறை தராத நிலை என்றும்

தருவாய் தாயே
 மழையோ வெயிலோ எனை
வாட்டா நிலை என்றும்

தருவாய் தாயே
 குறைவோ நிறைவோ
மனம் எதையும்
வேண்டா நிலை என்றும் ...........................

Monday, December 12, 2011

அனைத்தும் விண்ணுக்கே ( wish 1 )

விண்ணுக்கு உயர்த்து என் எண்ணைத்தை
என் உயிர் தாயே அது
வீதியிலே சுற்றித்  திரிந்தாலும்

விண்ணுக்கு உயர்த்து என் உடலை
என் உயிர் தாயே அது
மண்ணிலே மாண்டு  மறைந்தாலும்

விண்ணுக்கு உயர்த்து என் உயிரை
என் உயிர் தாயே அது
மறுபடி மறுபடித் தோன்றினாலும் .............
..

Tuesday, November 22, 2011








விதவை எனும் வார்த்தையை
விறகு கட்டையாக்கி 
சிதையில் எறிந்திடு நிரந்தரமாக
அக்னிதேவன் மகிழ்ந்து உன்னை
மங்களம் உண்டாக
வாழ்த்தி நிற்பான்

பெண்ணே
தனி மரம் நிழல் தரலாம் ஆனால்
தோப்பு ஆகாது 
மலர் சூடி மங்களம் பூண்டு
மக்களை காத்து
மணம் பெற வாழப் பிறந்தவள் நீ
தயங்காதே
நல்லெண்ணம் இதயத்தில் ஏந்தி
குங்குமம் நெற்றியில்  சூடி
மணம் பெற்று வாழ 
புறப்படு

எங்கும் மங்களம் உண்டாகட்டும் !!!!!

A wise woman is one who raise herself spiritually very  high so that she never leaves her loving husband ......said by Sumathi Srivatsangam


நன்றி சொல்வோம் (Divine 2 !)

நன்றி சொல்லுவது
நல்லோர்களின் வழக்கம்
நன்றி சொல்லுவோம் நம்மை
நலமாக படைத்த நாயகனுக்கு
நன்றி சொல்லுவோம் நாம்
நலம்பெற  வாழ்வில் உயர்த்தியவர்க்கு
நன்றி  சொல்லுவோம் நம்மை
நலம் பெற வாழ வாழ்த்துவோருக்கு
நன்றி சொல்லுவோம் நம்மை
நலமாக காக்கும் நாட்டிற்கு
நன்றிகளை நாம் குவிப்போம்
நாள்தோறும்
நலன்கள் தானாக நமக்கு
நாள்தோறும் குவியும்

வண்ண மயமாக ( need /nature )


வானவில் பெண்ணே
வண்ணங்களைப்  பூசிக்கொண்டு
வானத்தை அலங்கரிக்கிறாயோ
வட்டமிடும் வண்ணத்துப் பூச்சி
உனைக்கண்டு தன்
வண்ணங்களை எண்ணிக்கொண்டு உன்
எண்ணங்களை எடை போட
வண்ணம் வானுக்குச் சொந்தமா
வாழும் இனத்துக்குச் சொந்தமா என மயங்க
வாழும் மானிடனின்
வாழ்வெல்லாம் வண்ணமயமாக மின்ன
வைபோகம் பொங்கட்டும்
வானவர்கள் வாழ்த்த !!!


Friday, November 18, 2011

எண்ணங்களே சக்தி ( power of thoughts )

எண்ணங்களே  உனது உயிர் சக்தி - உன்
எண்ணங்களுக்கு  சக்திகொடு மனதால்
எண்ணுவதெல்லாம்  நலமாயின்
எண்ணங்களெல்லாம் எல்லாம் உயிர் பெற்று

ஏற்றங்கள்  எங்கும் நிலைத்திடும்
ஏற்றங்களால்   உலகையே ஆளலாம்
ஏற்றங்களின்  நிறைவே இறைவன் பின்
எண்ணங்கள் எல்லாம்   இறைமயமே

Friday, June 24, 2011

பெண்ணே முரண்பாடு ஏன்

பெண் என்றால் பேயும் இரங்கும்---இது
பொன் மொழி
பேயுக்குக் கூட சிறந்த இதயம்
படைத்துள்ளான் இறைவன் ஆனால்
பெண்ணை பெண் தாக்குகிறாள்
பொறாமை  அவளிடம் கொந்தளிப்பதால்

எனக்கு எல்ல சுகமும் வேண்டும் ---மற்றவளுக்கு
எதற்கு சுகம் என்ற
எண்ணத்தை   சுட்டுப் பொசுக்கு இல்லையேல் அந்த
எண்ணமே உன்னை சுட்டுப் பொசுக்கி விடும்

இயற்க்கை பாரா  பட்சம் பார்க்கவில்லை
இறைவன் பாரா பட்சம் பார்ப்பதில்லை
இடையில் நீ யார்
இல்லை என்று மறுக்க
இன்பம் மற்றவளுக்கும் கிடைத்தால்

உன்னிடம் அவள் எதையும்
யாசிக்கவில்லை நீ
இழப்பதற்கு
அவளுக்கு இறைவன் அளிப்பதை
நீ யார் வேண்டாம் என
மறுப்பதற்கு

நல்லெண்ணம் ஏந்தி
நடை பயிலு ; இல்லையேல்
நலம் கெட்ட வாழ்வு
நாடி  வரும் உனைத் தேடி

பிறர் நலம் கருதி வாழ் உன்
பிறப்பின் பெருமை உயரும்
பிறப்பு உயர்ந்தால்  மறு
பிறவியும் இனிதாகும்

Even ghosts show sympathy to women
Goes a golden saying ; So
we know God has given better heart to them
But women attack women
Due to mere jealous

Should all the pleasure be mine
No one should have as much as I have
If that is your thought
Kill that right away otherwise
This very thought alone will
destroy you

Nature treats everyone equal
God has no partiallity
Who are you  Lady to say "no'
When another woman
Wants to enjoy life

She is not asking anything from you
 for you to lose
Then who are you to  reject
what God wants to give something
 to other woman

walk proud carrying good thoughts
in mind
Otherwise problems will come
on its own to you

Have good heart for
others welfare also
Your birth will glow
When your birth shines
Life will become Divine

Sunday, June 19, 2011

ப்ரம்மாக்களே ! You are the God

பிரமன் நம்மை படைத்தது
பல கோடி ஆசிகளுடன்
விதி என்று சொல்லி
விலகி விடாதீர்கள்
வாழ்விலிருந்து
நிமிர்ந்து நடங்கள்
நிம்மதியை நோக்கி
நினைப்பவை எல்லாம்
நலமாக இருந்தால்
நீங்களே பிரம்மன் !

God when created us
Has given  so much blessings So
Dont shun away from life
Calling it all fate

Walk straight towards peace
holding your head up
If the thoughts are all  beautiful
You become the God

Friday, June 17, 2011

திருட்டுக்கு பாராட்டு ( Romantic /copied )



காதலே,  என்
இதயத்தை எளிதாக
திருடிவிட்டாய்
திருடிய இதயத்தை
திருப்பித் தர இயலுமா
உன்னால்
நீ
திருப்பித் தந்தாலும்
என்னால் திரும்பிப்
பெற முடியுமா
திரும்பப் பெற்றால்
இயங்குமா என்னிடம் அது
திருடியதை நீயே
வைத்துக்கொள் உன்
திருட்டுக்குப் பரிசாக

இயங்கட்டும் என்
இதயம் உன்னிடமே
இதமாக என்றும்
இறவா வரம் பெற்று 
இணைந்து உன்னோடு !

O love
Thou have stolen my heart
so very easily
Could you give that back
To me ?
Even if you give me back
Is it possible to take it back ?
Even if I take it back
will it fit with me again ?
So keep my heart with you
As a gift for having
Stolen it
Let it beat with love
Staying with you
This way I stay immortal !



Wednesday, June 15, 2011

மங்களம் என்றும் ! ( social )

விதவை எனும் வார்த்தையை
விறகு கட்டையாக்கி  
சிதையில் எறிந்திடு நிரந்தரமாக
அக்னிதேவன் மகிழ்ந்து உன்னை
மங்களம் உண்டாக
வாழ்த்தி நிற்பான்
பெண்ணே
தனி மரம் நிழல் தரலாம் ஆனால்
தோப்பு ஆகாது  :நீ
மலர் சூடி மங்களம் பூண்டு
மக்களை காத்து
மணம் பெற வாழப் பிறந்தவள்
தயங்காதே 
நல்லெண்ணம் இதயத்தில் ஏந்தி 
குங்குமம் நெற்றியில்  சூடி 
மணம் பெற்று வாழ  
புறப்பட்டு
எங்கும் மங்களம் உண்டாகட்டும் !!!!!

A wise woman is one who raise herself spiritually very  high so that she never leaves her loving husband ......said by Sumathi Srivatsangam

Tuesday, May 31, 2011

நாளை நமதே ( social )

வளர்ந்த செடி பல
வண்ணம் கொண்ட
மலரைக் கொடுக்கிறது
ரசிப்பது மானிட வர்க்கமே
மலரிடம் செடி வேண்டுவது எதை ?

வளர்ந்த மரம் பல
சுவை மிகுந்த  
பழங்களைக் கொடுக்கிறது
சுவைத்து மகிழ்வது மானிட வர்க்கமே
பழத்திடம் மரம் வேண்டுவது எதை ?

பறவைகளும் மிருகங்களும்
குஞ்சினையும் குட்டியினையும்
ஈன்று வளரும் வரை
பராமரிக்கின்றன
அவைகள் தான் ஈன்றவைகளிடம்
வேண்டுவது எதை ?

மனிதனுக்கு மட்டும் தான்
இறைவன் ஆறறிவு கொடுத்துள்ளான்
குறைவோ நிறைவோ உன்
கடமையைச் செய்
குற்றவுணர்வு கொள்ளாதே
பலனையும் எதிர்பார்க்காதே

நல்லெண்ணமே இறைவன்
நம்பிக்கையே சிறந்த நண்பன்
நல்லெண்ணத்தை மனதில் பற்றி
நம்பிக்கையை கை பிடித்து
நடந்திட்டால்
நாளைய வெற்றி நமதே







Monday, May 23, 2011

எல்லாம் அவன் செயல்

நல்லவை நல்லவர்க்கு நடந்திட --தன்
நலம்  இல்லார்க்குப்  பிடிப்பது இல்லை
ஊக்கம் கொடுக்க மறுத்து  தன்
ஊனத்தைப் புகுத்திடுவர்
ஆதவனுக்கும் வெண் மதிக்கும்
கிரகணங்கள் வரலாம் --ஆனால்
ஆதவனையும் ஆசை முகம் காட்டி இரவை
அலங்கரிக்கும் மதியவளையும்
அடைக்கத் தாழ்கள் தான் உண்டோ
நல்லவை எண்ணி நல்லதை செய்து
நடை பயிலுவோம் வாழ்வில்
நடப்பவை  எல்லாம்  நலமாகும்
நாராயணன் அருளாலே






சங்கீதம் ( romantic)

முத்தங்கள் ஒவ்வொன்றாக பெற்றால்
சத்தங்கள் வந்திடுமே  
சத்தங்கள் இல்லையென்றால்
சங்கீதம் தோன்றிடுமா
முத்தங்கள் மழையாக பெய்தால்
சத்தங்கள் குறைந்திடுமே
முத்தங்கள் ஒவ்வொன்றாக வேண்டுமா
மொத்தமாக வேண்டுமா
சங்கீதம் இல்லாமல் போனால்
சந்தோஷம் குறைந்திடுமே ........

Friday, May 20, 2011

காதல் மயமாகி ....( romantic)

பரந்து உயர்ந்த நீல வானமே உன் மீது
தவழ்ந்து போகும்  தேய்பிறைக் காணா
நிலவு  நான் 


மயங்கும் இரவு வரும் பொழுது 
குளிர்ந்து   உனைத் தழுவிடுவேன்
காதலால் நான்

வெட்கம் எனைத் தழுவும்  போது
மேகமெனும் போர்வைக்குள்
மறைவேன் நான்  



மேனி காட்ட நீ ஆணையிடும் போ து
வேகமாக விலக்கிடுவேன் மேகத்தை
உனக்காக நான் 

மின்னும்  நட்சத்திரக் கூட்டமோ 
கண் சிமிட்டி இந்த  காதலைக்  கண்டு
வாழ்த்திடும் நம்மை  

இரவு  வளர  நிலவும்  வளரும்போது  
நம் காதலும் வளரும்
இறைவன் அருளாலே 

   

Tuesday, May 17, 2011

காதல் (romantic)


கண்டேன் ஒரு பெண்ணை -எனை
வென்றாள்  தன் இரு
 கண்களால்
இதயங்கள் இடம் மாறின
இதமான உறவு வளர  
புரிதல் பல நூறு
மலரும் விழியோரம்
தொடரும் பயணங்கள்
தருமே புது இன்பங்கள்
இறைவன் கருணை செய்ய
இருப்பேன் இளமையோடு !!!

Saw a woman who
won me with her beautiful eyes
The heart exchanged its place
To start a wonderful relationship
many understanding will bloom
through  the eye contacts itself
The journey of love will follow
giving beautiful experiences
God will shower his love
so will  remain young  !


Friday, May 13, 2011

தாயும் தெய்வமும் ( social)

அங்கத்தில் பாதியை
அம்பிகைக்கு அளித்து
அர்த்தநாரீஸ்வரன்
ஆகினான் ஈசன் --தன்
அங்கத்தில் பங்கு கொடுத்து
ஓர் உயிரை ஈன்றெடுத்து
அன்னையாகிறாள் பெண்
ஈன்றவள் ஈசனுக்கு
சமமாகிறாள் இங்கே
பெண்மையைப் போற்றுங்கள்
மென்மையைக்  காட்டி
தாய்மைக்கு    தலை வணங்குங்கள்
தாயைக்  காப்பாற்றி !



இரெண்டும் ஒன்றே ( kids)


குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலே
ஆம்
இருவரையும் கொண்டாடவேண்டும்

வளர்ந்தாலும் வருடத்தை  மட்டும்
ஏற்றுக்கொண்டு
வாழலாம்  குழந்தையாகவே 

குழந்தையாக வாழ்ந்தால் 
தெய்வம் அங்கு என்றும் வாழும்
தெய்வம் வாழுமிடம்
தேவலோகமாகும் 
வளரட்டும் குழந்தை உள்ளம் 
எல்லோரிடமும் 
பூலோகம்  எங்கும்
தெய்வங்கள்  வாழட்டும் !!!
  

Sunday, May 8, 2011

ஆள்வோமா (social)


பேசுவது கிளியா இல்லை
பெண் அரசி மொழியா
வியந்து சொன்னேன் ஒரு கவி
கிளி பேசும் ; சொன்னதைச் சொல்லும்
கேட்பவரை வசீகரிக்கும்
பெண் மொழிந்தாலும் இனிமையே ---அவள்
நல்லவை சொல்ல வேண்டும்
சொன்னதை செய்யவேண்டும் -பின் அவள்
மொழிக்கு அரசி ஆவாள்
மொழிவதெல்லாம் அமுதமானால்
ஆளுவது சொர்க்கமாகும்
மங்கையரே தயக்கமென்ன
ஆளலாம் வாருங்கள்
பூலோகம்  சொர்கமாகட்டும் !!!

A tamil song from a poet says
Is it the parrot speaking or the
queen of language
The parrot repeats what is said
still it is so beautiful
   

Saturday, April 30, 2011

வாருங்கள் வெல்வதற்கு (social )

சித்திரம்  பேசினால்
சிந்தை மயங்குமாம்
சொன்னான் ஒரு கவிஞன் அன்று
சிற்பங்கள் ஆடினால்
சொர்கங்கள் திறக்குமா
நான் வியக்கிறேன் இன்று
சொர்கங்கள் திறந்தால்
இன்பங்கள் கூடலாம்
இன்பங்கள் கூடினால் பல
ஜென்மங்களை வெல்லலாம்
ஜென்மங்களை வென்றால் பின்
இறைவனடி சேர்ந்திடலாம்
புறப்படலாமா வெல்வதற்கு .............

Winning isn't everything ,it is the only thing said by Great Football  Coach :Vince Lombardi


Thursday, April 28, 2011

மே மாதப் பெண்ணே !





மேகங்கள் வந்தால்
தாகங்கள் தீரும் பூமிக்கு
மே மாதம் வந்தால்
வாழ்த்துக்கள் குவியும் உங்களுக்கு
பிறப்பின் பெருமையை
எடுத்துச் சொல்லி

கல்லூரி மாணவிகளுக்கு
கற்கண்டு நீங்களோ
கற்றவைகளை அள்ளிக் கொடுத்து
கலைவாணி ஆகினீரோ
உங்களை வாழ்த்த
எங்களுக்கு சந்தர்ப்பம் இது
வளரட்டும் உங்கள் ஆயுள்
தொடரட்டும் உங்கள் தொண்டு 
கலைவாணியும்  வாழ்த்துவாள்
கருணையோடு உங்களை இன்று  ( May 1st ) 

 

Sunday, April 24, 2011

இளமை உரித்தாகுக (Stay young )

பெண்  ஒன்றைக் கண்டு
பிரமித்து நின்றான் ஒருவன்
அவள்  வாழ்வில் 
கடந்து வந்த உயரத்தை எண்ணி

வியப்பு வளரும்போது
வயது குறைகின்றது
இளமை துள்ளுகிறது
இதயம் இனிக்கிறது


வியக்கும் வண்ணம்  வாழ்ந்து 
விந்தைகள் பல புரிந்தால் 
இளமை  உரித்தாகும் 
இவ்வுலகில் எல்லோருக்கும் !


A man was amazed looking
 at a lioness  the height
that it has reached
Exclamation of delight
when it grows in ones life
the age gets reduced
The youth dances there
the heart is filled
this is nature's gift
why not live a life
filled with exclamations
doing miracles
let youthfulness come
to every one  in the world! 

பரிசு ( romance)

இதயங்கள் இடம் மாறின
 இமைப்பொழுதில்
இது காதலின் மேல்
கவிஞர்கள் கூறும் கருத்து
இதயம் பெரும்பாலும்
காதலுக்கு சொந்தம்
தன்னையே நினைக்கும் இதயம்
காதலில் விழுந்துவிட்டால்
காதலுக்கு சொந்தமானவரை
நினைத்து இயங்குகிறது
இதுதான் இதயத்தின் இடமாற்றம்
இது ஒரு அழகிய தடுமாற்றம்
காதலுக்கு வயது ஏது ---இந்த
காதல் அந்த ஈசனின் மீதும் வரலாம்
காதல் ஆழமானால் வயதும் நீளமாகும்
காதல் கொடுக்கும் பரிசு இது
பரிசை பெறலாமே அனைவரும்

Friday, April 22, 2011

நாளையின் நம்பிக்கை (social)

தாயும் பிள்ளையும் ஒன்றானாலும்
வாயும் வயிறும் வேறு
இது பழமொழி
தாயின் கருவறையில்  உள்ளபோதே
இந்நிலை வந்து விடுகிறது 
 பிறந்த பின்
தாய் பாலூட்டுகிறாள் சீராட்டுகிறாள்
சோறு ஊட்டுகிறாள் தன்
இடையில் இடுக்கிக்   கொண்டு --அவன்
போகும் திசையெல்லாம் இவள் நடை --அவன்
உறக்கமும் இவளின்  விழிப்பு 
காலங்கள் கடக்கிறது ---தன்
கோலங்களை காட்டி 

தாரம் தேடும் தருணம் மகனுக்கு 
தாரை வார்த்து தருகிறாள் தாயும் --உடன் 
தாய் தூரத்து சொந்தம் ஆகிறாள் 
என்ன விந்தையடா  இது ???
உறவுகள் வளர்ந்தால் தான் அது
உறவாகும்
முறிந்தால் அது முடிவாகும்

செடிகள் சிறந்து தழைக்க
பூத்து மலர
காலங்களின் நிலைக்கு ஏற்ப அதை
கத்தரித்து விட்டு வளர்ப்பார்
உறவுகளும் காலப்  போக்கில்
சிதைந்து போகும்போது
சற்று விலகிப் போனால்  மறுபடி
தழைக்கலாம்
பூத்து மலரலாம்

நம்பிக்கை தானே நாளை !!!




Wednesday, April 20, 2011

தெய்வீக நிலை

பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை என்பர்
நிறத்தில்
பாலுண்டால் பசியாறும்
கள்ளுண்டால் போதை ஏறும்
 
பசியும் மறுபடியும் வரும்
பால் அருந்த வேண்டும்
போதையும் தெளிந்து விடும்
கள்ளும் அருந்த வேண்டும்
  
பசியாறினால்   போதுமே  வாழ்வுக்கு
போதை வேண்டாமா உயிர் வாழ
பால்  அருந்தி பசியாறி
இறைவனின் நாமம்  உச்சரித்து
அந்நிலையில் இருக்கலாம் 

Saturday, April 16, 2011

வேண்டாமே இது !

பிறர் வாழ்ந்து  பார்க்க
பொறுப்பதில்லை பலருக்கு  --இது
பிறப்பிலே வந்த குணமா ----இல்லை
பிறரால்   கொடுக்கப்பட்ட   பொருளா 

பிறரையும்  நாமாக  நினைத்தால்
பிறந்திடுமா   இந்த   குணமும்
பிறரையும்    வாழவைத்து   வாழ்ந்தால்
பிறப்பின்    பெருமை   அல்லவா   உயரும் !

Tuesday, April 12, 2011

Light  up the candles
  looking at the moon light
Bright up the days
  watering the garden
Straight up the back
  sitting at the riverbank
pick up some flowers
thinking of your LOVER

Monday, April 11, 2011

Force not

When there is no force
 the earth revolves around smoothly
When there is no force
 the  ocean undulates beautifully
when there is no force
the wind blows gently/softly
when there is no force
the trees swings slowly
when there is no force
the love flows unconditionally
not force yourself into anything
but force yourself to
enjoy everything around you
smothly ,beautifully ,gently
slowly and unconditionally
you sure see the  heaven on the earth
without any force !

Friday, April 8, 2011

முத்தம் ( romance )


 

முத்தம் அதை நினைத்தால் எங்கும்
  உள்ளம் அது என்றும் இனிக்கும்
முத்தம் அதை கொடுத்தால்  ஏறும்
   கர்வம்  அது தலை வரைக்கும்
முத்தம் அதை பெற்றால்  மாறும்
  சத்தம் அது இதயம் வரைக்கும்
முத்தம் அதைக்  கொண்டால் (வென்றால் )
  வாழும் காலம் நீளும் அது ஒரு
    ஒரு  யுகம் வரைக்கும் !

யாவும் அருள்வாய்

createanawesomeuniverse_thumb3

ஒளியாக்கு   என்னை   அருளும் ஜோதியே ---- வழிகாட்டும்
 விளக்காக்கு   என்னை  அருளும் ஜோதியே
உதவும் கரமாக்கு என்னை அருளும் ஜோதியே
இறைவழி காண இரையாக்கு என்னை அருளும் ஜோதியே
இறந்த பிறகும் உன்னை  நினைக்கும் இதயமாக்கு என்னை
அருள் பெரும் ஜோதியே !!!

Wednesday, April 6, 2011

அனைத்தும் அனைவருக்கும்

       
15% Off


நம்மைச் சுற்றி வட்டம் இட்டுக் கொண்டால்
பட்டாம் பூச்சி போல பறக்க முடியுமா
இதயத்தை இதமாக பறக்க விட்டால்
இனிமையாக பற்றிடலாம் எதையுமே
எண்ணங்களை வலுவாக்கிவிட்டால்---- பல
வண்ணங்களைக் கண்டிடலாம் வாழ்வினிலே
வேள்விகளை  மனதால்  செய்தால்
வென்றிடலாம் வாழ்வினையே
நினைத்தவை எல்லாம் கிட்டிடும்
நிமிர்ந்து நில்லுங்கள் அனைவருமே !

Tuesday, April 5, 2011

அன்பே மையம்

புவியின் ஈர்ப்பு சக்தி(மையம் ) அன்பு
இந்த சக்தியிலிருந்து  சற்று
விலகினால் சிதறிவிடுகிறது
மானிடனின் வாழ்வு
மறுபடி அந்த ஈர்ப்புக்குள்
வரும் வரை அவன் தவிக்கிறான்
தவிப்பில் தவறுகளும் நிகழலாம்
இது இயற்க்கை

வானளவு உயர்ந்த மரமும்
பூமியிலிருந்து தோன்றியவையே
இதன் காரணம்தானோ
தங்கள் உடைமைகளை (இலை ,பூ,பழம் )
பூமிக்கே அற்பணிக்கிறது
அன்பு ஈர்க்கிறது அங்கே

பூக்கள் மலரும் போது
எடுத்துக்கொள்ளும் ஒளி
சூரியனோ சந்திரனோ --அவை பின்
சேருவது பூமியையே
அங்கும் ஈர்ப்பு மையம் அன்பே

இந்த ஈர்ப்பு சக்தி கலங்கும் போது
உண்டாவது தான்
சுனாமியும் நில அதிர்வும் மற்ற
பூமியின் கொந்தளிப்பும் போல

அன்பை மையம் கொள்வோம்
ஈர்பபோம் அனைத்தையுமே !


Monday, April 4, 2011

உலகக் கோப்பை April 2nd , 2011

              Nike Muse, goddess of musical victory, with lyre | Greek vase, Athenian red figure lekythos
ஓடி விளையாடு பாப்பா என்ற
பாரதியின் கவிதையை மனதில்
கொண்டேன் இன்று
ஓடி விளையாடி உலகக் கோப்பையை
கையில் ஏந்திய கிரிக்கெட் வீரர்களைக்
கண்டேன் இன்று
கோடி கோடி மக்களின் கொள்ளை ஆசையை
பூர்த்தி செய்த கம்பீரக் குழந்தைகளை
வாழ்த்தினேன் இன்று
விளையாட்டோ உண்மை வாழ்வோ
எங்கும் எதிலும் எல்லோருக்கும்
வெற்றி கிடைக்க வணங்கி நிற்ப்போம்
பூலோக மாதாவை   !!! 

Tuesday, March 29, 2011

சின்ன சின்ன ஆசை

சிட்டுக் குருவிகள்  சிறகடித்து  பறக்க
சிங்காரத்   தோட்டத்தில்  அமர்ந்தேன்
பட்டாம்ப்   பூச்சிகள்   வட்டமிட
பல  வண்ணங்களைக்  கண்டு   வியந்தேன்
மெத்தென்ற   புல்வெளி  மேல் நடக்க
மேனி   சிலிர்த்து  மயங்கி நின்றேன்
பட்டான  என்    மேனியில்    தென்றல்
சட்ரென்று  தொட்டுப்     போகக்     கண்டேன் 
கண்ணை  மூடி  உலகை   மறக்க   இந்த
சின்ன சின்ன   ஆசை   போதுமே

சின்ன சின்ன ஆசை

சிட்டுக் குருவிகள்  சிறகடித்து  பறக்க
சிங்காரத் தோட்டத்தில் அமர்ந்தேன்
பட்டாம்ப் பூச்சிகள் வட்டமிட
பல வண்ணங்களைக்  கண்டு வியந்தேன்
மெத்தென்ற புல்வெளி மேல் நடக்க
மேனி சிலிர்த்து மயங்கி நின்றேன்
பட்டான     மேனியில்    தென்றல்
தொட்டு    போகக்     கண்டேன் 
சுற்றம் சூழலை  மறக்க   இந்த
சின்ன சின்ன   இன்பம்  போதுமே

Monday, March 28, 2011

மணநாள் வாழ்த்து

மணக் கோலம் பூண்டு
ஒரு ஆண்டு ஆகிய நிலையில்
இனிமையான நினைவுகளை
இதமாக எண்ணி மகிழ --என்றும்
புது மணத் தம்பதிகளாகப்
புதுமையுடன் வாழ
உற்றார் உறவினருடன்
உணவுண்டு மகிழ ---இன்று
பெற்றோர்களின் வாழ்த்தில் --புது
மணமாலை சூடிக்
கரைக்காணா  இன்பங்களை
கடவுள் அருளில்  பெற
மற்றோருடன் நானும் கூடி
வாழ்த்துக்களை மடலில்
அனுப்புகிறேன் மனதில்
ஆண்டவனை  நிறுத்தி !

Sunday, March 20, 2011

வான் கண்ட அழகு ( nature )

ஏ  வானவில் பெண்ணே  !
வண்ணமயமான  சேலை (ஆடை ) பூண்டு
வளைந்து நிற்கின்றாய் அழகாக

ஆதவன்  அழைப்பை  ஏற்று
கருமேகப்  போர்வை களைந்து
வெளிவந்தாயோ

நாணம்  கொண்டதால்
மழைத் தூரலை
இடையே வைத்து  பின்
வளைந்தாயோ

நாணம் இத்தனை அழகான
வண்ணம் கொண்டதா ?
வியந்தேன் வியந்து நிற்கிறேன்

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்
 எங்கள் இறைவா என !!!


முறுவல் ( social)

முறுவல்
அது அணிந்தால் பரிசு அது உனக்கே

முறுவல்
அது முறிந்ததால் இழப்பு அது உனக்கே

முறுவல்
அது கொடுத்தால்  உயர்வு  அது உனக்கே

முறுவல்
அது கொண்டால் வெளிச்சம் அது உனக்கே

முறுவல்
அது உன் முகம் காட்டும் கண்ணாடி

உரித்தாகட்டும் பரிசு உனக்கே என்றும் !
அழகாகட்டும் உன் முகம் என்றும் !
ஒளி வீசட்டும் உன் வாழ்வில் என்றும் !

Friday, March 18, 2011

வாழ்வின் தேவை

உறவு அது முறிந்தால்
போதும் ....  அங்கே பிரிவு
கூடியே    வாழ்ந்தாலும்  

அன்பு   அது  இருந்தால்
போதும் ...  அங்கே  உயிர்
உடன்   வாழும்  என்றும்

தெளிவு  அது   இருந்தால் 
போதும் ....அங்கே  அமைதி
தானே  குடி  கொள்ளும்

மனது அது  நிறைந்தால்
போதும்  அங்கே
தெய்வம்  அது   என்றும்  வாழும் !




Thursday, March 17, 2011

மதி வணக்கம்

துள்ளி வரும் வெள்ளி நிலவே 
குளிர்வு கொடுத்து 
மகிழ வைக்கும்  நிலவுப்  பெண்ணே  
உன் அழகு உனக்குத்  தெரியாதோ
அதைக் கொண்டு நீ
எங்களை அழகாக்குகிறையோ
இருள் சூழும் தருணம் வந்து
உன் முகம் காட்டி மயககுகிறாயே 
என்னே உன் கருணை
எங்கள் நிலவுத் தாயே !

Oh beautiful moon
U bathe us on your coolness and
make us happy ;
you dont know how beautiful u are
but with your beauty
you soak us all  in your beauty
when it gets dark around the horizone
you come out  and show your beautiful face
and make us feel go into ecstacy
with your light
How kind you are to us
Oh goddess Moon !

உயர்வு with messages


Charge of the Goddess
"Whenever you have need of anything, once in the month, and better it be when the moon is full, you shall assemble in some secret place and adore the spirit of Me who is Queen of all the Wise. You shall be free from slavery, and as a sign that you be free you shall be naked in your rites. Sing, feast, dance, make music and love, all in My presence, for Mine is the ecstasy of the spirit, and Mine also is joy on earth. For My law is love unto all beings. Mine is the secret that opens the door of youth, and Mine is the cup of wine of life that is the Cauldron of Ceridwen that is the holy grail of immortality. I give the knowledge of the spirit eternal and beyond death I give peace and freedom and reunion with those that have gone before. Nor do I demand aught of sacrifice, for behold, I am the mother of all things, and My love is poured upon the earth."

riskybar.jpg (2563 bytes)

goddess.jpg (37338 bytes)
"The Goddess"

riskybar.jpg (2563 bytes)

Hear the words of the Star Goddess, the dust whose feet are the host of heaven, whose body encircles the universe: "I who am the beauty of the green earth and the white moon among the stars and the mysteries of the waters, I call upon your soul to arise and come unto me. For I am the soul of nature that gives life to the universe. From Me all things proceed and unto Me they must return. Let My worship be in the heart that rejoices, for behold -- all acts of love and pleasure are My rituals. Let there be beauty and strength, power and compassion, honor and humility, mirth and reverence within you. And you who seek to know Me, know that your seeking and yearning will avail you not, unless you know the Mystery: for if that which you seek, you find not within yourself, you will never find it without. For behold, I have been with you from the beginning, and I am that which is attained at the end of desire."
Doreen Valiente, Book of Shadows
Hear the words of the Star Goddess, the dust whose feet are the host of heaven, whose body encircles the universe: "I who am the beauty of the green earth and the white moon among the stars and the mysteries of the waters, I call upon your soul to arise and come unto me. For I am the soul of nature that gives life to the universe. From Me all things proceed and unto Me they must return. Let My worship be in the heart that rejoices, for behold -- all acts of love and pleasure are My rituals. Let there be beauty and strength, power and compassion, honor and humility, mirth and reverence within you. And you who seek to know Me, know that your seeking and yearning will avail you not, unless you know the Mystery: for if that which you seek, you find not within yourself, you will never find it without. For behold, I have been with you from the beginning, and I am that which is attained at the end of desire."
Doreen Valiente, Book of Shadows

உயர்வு

என்  நிலை மறந்து
பிறர் நிலை உணர்ந்து
உன் நிலையில் இருந்து  
பிறர் நிலை உயர்த்தி
என் நிலை உயர்வு பெற
வழி காட்டுத் தாயே !

Tuesday, March 15, 2011

புவியிலே

பரந்த
வானமெங்கும் கருத்த மேகக் கூட்டம்
கரு
மேகங்கள் அணைத்துக்கொள்ள அங்கே
வெட்டி அடிக்கும் மின்னலின் ஓட்டம்
பின்பு
வருகின்ற மழைத் தூறலின் ஆட்டம்
இவை
அனைத்தையும் ரசித்து நின்ற என் மனதின் சத்தம்
அந்த
சத்தத்தில் வந்த வார்த்தைகளின் வண்ணம்
இந்த
வண்ணங்களில் வழிந்தோடும் எண்ணம்
இவை
எல்லாம் படைத்த அந்த இறைவனின் சூட்சமம்
ஆஹா
 புவியில் இன்பங்கள் பொய் அல்லவே

Friday, March 11, 2011

பிம்பம் கொடுத்த பிரமிப்பு

இரவு வானில் நிலவு உலவியது
மேகங்களின் ஆடையில்
 நட்சத்திர தோழிகளுடன்

குனிந்து பார்த்துச் சிலிர்த்தது --அங்கே
தெளிந்த ஓடையில் அழகாகத்
தெரிந்த நிலவைக்  கண்டு

நட்சத்திர கூட்டங்களை அழைத்து  அது
யார் என்று கேட்டது
சிரித்துக்கொண்டே அவைகள்
உன்னை உனக்குத்  தெரியலையா
என்றன

இத்தனை அழகை நான்
பார்த்ததில்லையே என்ற  நிலவு
குனிந்து பார்த்து
 ஓடைக்கு நன்றி கூறியது
அழகை பிம்பமாக்கிக்  காட்டியதற்கு ! 

Thursday, March 10, 2011

இயற்கை துணை......

பூக்கள்    எனைப்    பார்த்துச்  சிரிக்க 
அமைத்தேன்   ஒரு   பூந்தோட்டம்  அதை 
புல்வெளி வாசத்தை   நுகர   வளர்த்தேன்  -
-புதுப் பசுமையை எங்கும்
காற்றிலே   மெல்ல     பறக்க அன்போடு 
 அழைத்தேன்    பல   பட்டாம்   பூச்சியை  
மேகங்களைத்    தொட்டு அணைக்க  
தூது விட்டேன்    மின்னலுக்கு  
வானின்   தாரகை  அணிய
இரவு  தேவதையை வேண்டினேன் -இவ்
வையகம் வாழ்த்தி வாழ --வாழ்வுக்கு
கேட்கிறேன்  ஒரு    துணையை  .........

நானும் நீயும்

உன்னை நான் எதிர்பார்க்கவில்லை --நீ
வருவாய் என்று அறிந்ததலோ
உன்னை நான் நிமிர்ந்து பார்க்கவில்லை நீ
என்னையே பார்த்துக்கொண்டிருப்பதலோ
உன்னை நான் வேறு என்று நினைக்கவில்லை நீ
என்னையே உனதாக நினைப்பதாலோ
நம்மை நாம் நினைக்கத் தேவையில்லை -நமக்குள்
வாழும்  அன்பினை  நினைவில் கொண்டால்


 Did not expect that you would come
 May be I knew that you would come
 for sure
 Did not look at you because  I knew
 you had been looking at me only
 Did not think you were someone else
 when you thought  I was yours
we need  not think of ourselves when
we  remember the God in ourselves

Thursday, March 3, 2011

எளிமை

சொல்லில் இருப்பது இல்லை எளிமை
எண்ணத்தில் இருப்பது இல்லை எளிமை
செயலிலும் இருப்பது இல்லை எளிமை ---ஆனால்
வாழ்கிறோம் நாங்கள் எளிமையாக
என்பர் பலர் உடையை மட்டும்
எளிமையாக்கி கொண்டு
உடுத்து எதை வேண்டுமானாலும் --அது
உன் உடலை மட்டும் மறைக்கட்டும்

உள்ளத்தை எளிமை படுத்து ---உன்
எண்ணத்தை எளிமை படுத்து ---உன்
செயலை எளிமை படுத்து ---உன்
இதயம் வெளிப்படையாகும் ---இதில்
உன் வாழ்வு மட்டுமல்ல  உடன்
வாழ்வோர்  வாழ்வும் எளிமை ஆகிவிடும்

Tuesday, February 22, 2011

மகத்துவம்

ரோஜா மிக அழகான மலர்
வாசம் கொள்ளையாகக் கொண்டது
பார்ப்பவர் எல்லோரும்
பறிக்கத் துடிப்பார் -அது
தன்னோடு முட்கள் கொண்டது
ஏன் என்று கேட்க முடியாது --இது
இறைவன் படைப்பு
காரணம் இருக்கத்தான் இருக்கும்
மலரை குறை கூறாதே
உனக்கு மலரை மட்டும்
பறித்துக்கொள்ளும் அறிவை அந்த
பரம்பொருள் கொடுத்துள்ளான்

அழகு ஆர்த்திக்க வேண்டிய ஒன்று
ஆண்டவன் அழகு மயமானவன் --அவனை
அழகை வைத்து ஆராதிக்கலாமே  
மலரை ஆசையோடுப்  பறித்து
உன் பக்தியோடு அதையும்
இறைவனடி சேர்
இறைவனடி சேர்வது மலர் மட்டும் அல்ல ---உன்
உடல் பொருள் ஆவி அனைத்துமே
மலரின் மகத்துவம் இது !

காரணம் நம் தேடலில்

ஜகன்மாதா அனைத்தையும் துறந்து தன்
நாயகனைத் தொடர்ந்தாள் கானகத்துக்கு
மானிட அவதாரம் எடுத்தவளாக

கானகத்தில் அவள்  கண்டது
பொன் மான்
ஆசை கொண்டாள் அதை அடைய
அழைத்தாள் தன் நாயகனை 

மானிட அவதாரம் எடுத்த
ஸ்ரீ நாராயணனும் சென்றான் அதை
கொண்டுவர உடனே
செய்வது  தவறா சரியா என்ற
கேள்வி இருவரிடமும் எழவில்லை 
மானிட அவதாரத்தில் உள்ளதால்

லோக மாதாவும் எம்பெருமானும்
பூவுலகுக்கு வந்ததின் காரணம்
நன்கு அறிவர்
நாம் அறிவோமா நம் பிறப்பின்
காரணத்தை ?

நம் தேடலில்தான் காரணம் உள்ளது
கண்டிபிடிக்க வேண்டும் நிச்சியமாக 
இறைவனை மனதில் நிறுத்தி !



Monday, February 21, 2011

வாழ்வில் வலிகள் வரலாம் ---அவை
நாட்பொழுதில் ஆறிவிடும் ---ஆனால்
இழப்புகள் நேர்ந்தால் அதை
ஈடுகட்ட முடியாது எத்தனை
நாட்கள் ஆனாலும்
இழப்பு நேராதிருப்பது பல சமயம்
நம் கையில் இருப்பதில்லை
இழப்பு நேர்ந்தால் இறைவன்
ஒருவனைக் கொண்டே ஈடுகட்ட முடியும்
என்றும் இழக்க கூடாதது
ஈசனின் திருநாமம்
(சந்தோஷ ) வானில் பறந்தாலும்
(துயரக் ) கடலில் மூழ்கினாலும்
இருக்கப் பற்றிக் கொள்ள வேண்டியது
பரமனின் திருவடிகளை மனதில்
எந்த சுனாமியும் அடித்துச் செல்லாது
எந்த டோர்ணடோவும் அழித்து விடாது  நம்மை
பற்றிக்கொள்ள அவன் திருவடிகள் இருக்கையிலே
பற்றற்ற வாழ்வு பவித்திரம் ஆகிவிடும்

Saturday, February 19, 2011

நிறைவு divine )

தேடலில் நாம்   தேடவேண்டியது  அமைதியை

அமைதியில் நாம்  தேடவேண்டும்  அன்பை

அன்பில் நாம் தேடவேண்டியது  ஆண்டவன்

ஆண்டவனிடம் நாம் தேடலாம்  நம்  ஆத்மாவை

ஆத்மாவும் ஆண்டவனும் ஒன்றாகிவிட்டால்

நம் தேடல் நிறைவு பெற்றிடும் ! 

Thursday, February 17, 2011

எது வேண்டும்

இதயம் வேறு மூளை வேறு
ஆம்
மூளை காரணத்தை தேடும் சிந்திப்பதால்
இதயம் காரணத்தை தேடாது காதலிப்பதால்
சிந்திப்பது நல்லதா
காதலிப்பது நல்லதா
சிந்தித்தால் விடை கிடைக்கும்
காதலித்தால் அன்பு/அருள்/ஆனந்தம் கிடைக்கும்
விடை வேண்டுமா இல்லை
அன்பு/அருள்/ஆனந்தம் வேண்டுமா வாழ்வுக்கு

ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் முடியும்
இது மூளையின் வேலை
கண்டுபிடிப்பு ஆனந்தமும்  தரலாம்
அவஸ்தையும் தரலாம்

அன்பு  ஆனந்தத்தில்தான்   முடியும்  
இது இதயத்தின் வேலை

ஆண்டவன் ஆனந்தமயமாக இருக்கிறான்--அவனே
கேள்வியும் பதிலுமாக இருக்கிறான்
ஆராய்ச்சியில் சிக்காமல்
ஆனந்தத்தில் தத்தளிக்கலாமே !

Heart is different from mind9brain)
mind will look for reasons
as it thinks
heart sinply loves so
dont look for logics/reasons
is it good to think or
it is good to love ?
thinking gets u solutions
love gets you nice feelings,
get blessings,get happiness
do we need answers or
of haapiness ,love and blessings for life

doing research will bring findings
it is mind's(brain's ) job
Findings can bring joy
and it can bring sorrow also

But love will end only in happiness
It is heart 's job

God is personification of happiness
HE stands  the question as well the answer
Instead of getting into reasearch
let us float in the happiness



Tuesday, February 15, 2011

வேண்டும தாய் அகம்

பிறந்தது என் தவறல்ல பெருமானே
பிறவியின் பலனும் என் விருப்பம் அல்ல பெருமானே
பிறப்பும்   இறப்பும்  என் கையில் இல்லாத போது---- மறு
பிறவி ஒன்றை வேண்டுவதும் நான் அல்ல பெருமானே
வேதனையும் வேண்டவில்லை சுகத்தையும் வேண்டவில்லை
வேண்டுவது எல்லாம் கொடுக்க
வேலவன் நீ இருக்கையிலே பெருமானே
வேல் ஒன்று போதும் உன் மயில் ஒன்று போதும்
மனதில் கொள்ள
வேள்விகள் தேவையில்லை
விரைவில் நீ வருவது திண்ணம்
வேதனைகள் எனக்கில்லை பெருமானே
தாய் அகம் நான் செல்வேன் -சிறு
குழந்தையென தவழ்திடுவேன் -அங்கே எனை
குழந்தையென நிறுத்திக்கொள்ளும்  நெஞ்சினிலே !


Sunday, February 13, 2011

இறவா வரம் ( divine )

மண்ணில்
விதைத்தவை  எல்லாம் பயிராவதில்லை
பயிரானவை எல்லாம் கதிராவதில்லை
கதிரானவை எல்லாம் காயாவதில்லை
காயானவை எல்லாம் கனியாவதில்லை
கனிந்தவை  எல்லாம் சுவைப்பதும் இல்லை
சுவைத்தவை எல்லாம் ஜரிப்பதும் இல்லை
எப்படி
மொட்டுக்கள்  எல்லாம்  மலர்வதிலையோ
மலர்ந்தவை எல்லாம் மணம் பெறுவதில்லையோ
மணம் பெற்றவைஎல்லாம்
இறைவனை அலங்கரிப்பதில்லையோ
அப்படியே
மண்ணில்
பிறந்தவர் எல்லோரும்
பிறந்தவர் ஆவதில்லை ------ ஆனால்
பிறந்தவர்  எல்லோரும் இறந்தவர் ஆவர்
ஒரு நாள் ----இங்கும்
தானும் வாழ்ந்து பிறரை வாழவைப்பவர்
இறைவனடி சேர்ந்தும்
இறவா வரம் பெறுவார் !





நட்பின் முட்கள் ( or புல்லுருவி )

பெண் உருவில் ஒருத்தியைக் கண்டேன்
அழகிய கண்களைக் கொண்ட அவளுக்கு
பழகவும் தெரியுமென நினைத்து
பழகும் நாட்களைத் தொடர்ந்தேன் ---அவளுடன்
அழகிய நினைவுகள் தொடருமென
தொடர்ந்தது நாட்கள் தான் ---ஆனால்
கசந்தது நட்பு ---நல்லவள் அவள்
உள்ளம்  உள்ளவள் என நினைத்தேன்
உள்ளம் அங்கு இல்லை ---வெறும்
பள்ளம் இருப்பதைத்தான் உணர்ந்தேன்
பள்ளம் முழுவதும் பொறாமை எனும்
முட்கள் நிரம்பி வழிவதையும் கண்டேன் ---வெறும்
பள்ளத்தில் விழுந்தால் வெளிக் காயத்துடன்
வெளிவரலாம் ----ஆனால்
முட்கள் நிறைந்த பள்ளத்தில் விழுந்தால்
முட்களும் நம்மை தொற்றிக்கொள்ளும்
முள்ளின் மேல் விழுந்த சேலையை
மெல்ல எடுப்பது போல
மெள்ள நகர்ந்தேன் பள்ளத்திலிருந்து
சேராத இடம் தன்னில் சேர வேண்டாம் என்
பெரியோர் அன்று சொன்னது இதுதானோ
முட்களை(பொறாமை ) என்னோடு அள்ளி வராது காத்த
 கடவுளுக்கு என் நன்றி உரித்தாகுக ! 

அதிஷ்ட்ட சக்கரம் (Wheel of fortune !)


வண்டி ஓட ரெண்டு சக்கரம் வேண்டும்
ரெண்டு சக்கரம் மட்டும் போதுமா ---அதைத்
தாங்க அச்சு ஆணி வேண்டும்
வாழ்க்கை என்பதும் ஒரு வண்டி போல்தான்
தாய் தந்தை என்ற இரு சக்கரம் தேவை ---அவர்களின்
ஒற்றுமையே வாழ்க்கையின் அச்சாணி --அந்த
அச்சாணி இல்லையெனில் வாழ்க்கையும்
தடம் புரண்டுவிடும் ---அதில்
பயணம் செய்யும் பயணிகளும் 
மூலைக்கு ஒன்றாக சிதறிவிடும்

ஒரு சக்கரம் தாங்கிய  வண்டி சற்று
சிரமத்துடன் தான் செல்லும்
தாயோ தந்தையோ மட்டும்
நடத்திச் செல்லும் வாழ்க்கையும்
இப்படித்தான்

குறைகளைக் கண்ட பயணிகள்
பயணம் முடிந்த பிறகு
சக்கரத்தை எட்டியும் உதைக்கலாம்
கடந்த தூரத்தை எண்ணி வியந்து
சக்கரத்தைப் போற்றிப் பாதுகாக்கலாம்

சக்கரம் ஒன்றோ இரேண்டோ ---அது
சுழலப் பிறந்தது ---பயணிகள்
இறங்கிவிட்டால் சக்கரம்
தன் வழியிலும் செல்லலாம்
தனி வழியிலும் செல்லலாம்

பயணித்தவர் பயணம் முடிந்த பிறகு
பாரம் சக்கரத்திற்கு அல்ல
சக்கரம் சுழலட்டுமே சந்தோஷமாக
அதிஷ்ட்ட    சக்கரமாக  என்றும் !


நானும் குழந்தையே

சிறுமி ஒருத்தி அருகில் வந்தாள்--தலையில்
குடுமி  ஒன்று அணிந்து இருந்தாள்
உரிமையோடு கையைப் பிடித்து
ஓடி ஆட அழைத்துச் சென்றாள்--என்
கண்களை மூடி ஒளிந்து கொண்டாள்
அவளைக் கண்டுபிடித்தால் --தன்
கன்னம் குழியச் சிரித்து நின்றாள்
சிறு குழந்தையென எனை நினைத்தாளே
மறு பிறவி ஒன்றைக் கொடுத்தாளே
கருணை கொண்ட  கடவுளும் என்னை
குழந்தையாக்கி நின்றானே !


Friday, February 11, 2011

தேடல்

தேடிச் செல்லவில்லை  எதையும்
தேடி வந்ததை கண்டு கொள்ள எண்ணி
தேடி வருவது  நிறைவு  பெறுமா (என்னிடம் )---எனைத்
தேர் கொண்டு அழைத்துச் செல்லுமா--- புதுத்
தேடல்கள் தொடங்கிடுமா
தெய்வங்களின் துணையோடு
தேவதை போல் நானும் மாறி
தெய்வத்தையே அடைவேனோ
(சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் போல் !)

Thursday, February 10, 2011

அவனே தவம் divine

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
நமக்குள் உள்ள அவனை
நாம்காணும் நிலையிலே

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
நமக்குள் உள்ள அவன்
நம்மை நாடி வருகையிலே

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
நம்மை அவன் தனக்குள்
அழைத்துச் செல்லும் அருளிலே

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
புவி ஏழும் உலவாது அவையெல்லாம்
அவன் உள்ளே காணுகையிலே

தவமே அவனாக இருக்கையிலே
பலிப்பதற்கு உளதோ ஏதும் !

Saturday, February 5, 2011

தேவதை ...

 
தேவதை
தேர்  கொண்டு வருக ---உன்
                                                           தேவதையை அழைத்துச் செல்ல
                                                          ஊர் முழுதும் உறவு சொல்லி மண.
                                                          மாலை  ஒன்றை  அணிய  வைத்து
                                                          பார் முழுதும் உலவிச் செல்ல
                                                          பாதையெல்லாம் மலர் தூவி
                                                          வான் போகும் நிலவும் நின்று
                                                          வட்டமிட்டு  இதைப் பார்க்க
                                                          வண்ண வண்ண பூக்கள்  எல்லாம்   காதல்
                                                          எண்ணங்கள் பல சொல்ல
                                                          கண்ணன் குழல் ஓசை காதோரம் கேட்டிட
                                                          மன்னன் நீ என்று   மகிழ்ந்திடா .



இதோ என் தேவதை


                                                        யார் உன்னைத்  தடுப்பது ---பலர்
                                                        நலம் பாடி நீயும்  வாழ

                                                     
                                                ........

Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள் (new year wish )

தென்றல் மெல்ல தீண்டிட என்
தேகம் யாவும் சிலிர்த்ததே ----உடன்
தென்னக்கீற்றும்  ஆடிட
தேன் போல இனித்தது என் உள்ளமே
இன்று
புத்தாண்டு மணம் பெற வந்ததே ---பலப்
புதுப்புதுப் எண்ணமும் உதித்ததே
புதிதாக மலர்ந்தேன்  நானே ---இனி
புவியில் ஒரு  வாடா மலராவேன்

முள்ளான வாழ்வின் பாதையெல்லாம்
முத்துக்கள் கொட்டிட கண்டேன் ---வெறும்
கல்லல்ல அவன் உண்மைக் கடவுளே
கருணையே வடிவாகி நிற்கிறான்

பொல்லாதது எல்லாம் எல்லோருக்கும் ---இனி
இல்லாது போகட்டுமே
நல்லாசிகள் மட்டும்  தங்கி
நலமாக வாழ வேண்டுவோமே .............

The gentle breeze that touched my body
felt
the long leaves of the coconut tree
started to swing in that breeze
made my heart like soaked in honey
Today
the New year came smelling beautifully--there
came many nice new thoughts --I felt
like as if i was a freshly bloomed flower
can never ever wither away
all the thorned path of my life
has become all pearls
HE is not just a stone that we worship
but a true Divine with great compassion
for us
what ever is bad for all let all go away
let all good wishes stay back
Let us pray to HIM for our
wonderful life