Tuesday, May 22, 2018

அன்பே வெற்றி

                                           அன்பே  வெற்றி

தன்னந்தனியாக  நடந்தன  என்  கால்கள்
அந்நிய  தேசத்திலே  ஒரு நாள்
காலைக்  கதிரவனின் கதகதப்பில்

தனியாக  நடந்தவை என் கால்கள் மட்டும் அல்ல  என்
மனமும் தான்   ; அங்கே
எண்ணம் ஆயிரம்  இருந்தனவேயன்றி  அவைகளுக்கு
வண்ணம் பூச  கூடவே  ஒரு துணை   இல்லாததால்

இடறி  விழுந்தேன்  கல்லொன்று தடுக்க
கால்  தடுமாறி  நடக்கையிலே
துணையொன்று   கைக் கோர்த்து  வந்திருந்தால்
இடையூறு   இப்படி  வந்திருக்குமா ? எழ
இயலவில்லை  உடனே   உள்ளச்சோர்வு
உடலைத்  தாக்க  ; அத்தருணம்

அன்புக்  குரல் கொடுத்தாள்
அந்நாட்டுச் சிறுமி  ஒருத்தி
ஓடும்  வாகனத்திலிருந்தபடியே  _ என் மீது
அக்கரைக்  காட்டி

கோலென பற்றிக்கொண்டது  அவள்
அன்பை  என் மனம்  பின்
எண்ணங்கள்   வண்ணமயமாக
உற்சாகம் பெற்றது உடலும்
எழுந்தேன்  தொடர்ந்தேன்  நடையை

அன்புக்கு  ஏது  அன்னியம்
அன்புக்கு   ஏது  அடைக்கும் தாழ்
எம்மதமும்  எம்மொழியும்
எந்நாடும்  சம்மதமே  அன்புக்கு
அன்பே வெற்றி அல்லவோ

 

No comments:

Post a Comment