Tuesday, August 7, 2012

sitting by the window ..............

Sitting by the window
 in the train
I was looking at the meadow
that was green

Sitting by the window
in the train
I was looking at the clouds
that carried the rain

Sitting by the window
in the train
I was looking at the flowers
that glow in the sun

Sitting by the window
in the train

I was looking at the night sky
for the moon 

Sitting by the window
I was listening to the temple
bell that was ringing at
a distance

Sitting by the window
in the  train
I was looking at the
heaven
beyond the sky 
...............................


Monday, August 6, 2012

வையகமே சொர்க்கம் ( nature)


வசந்த காலம்  பூமிக்கு
வண்ணம்  சேர்க்கும்
வண்ணங்கள்  வாழ்வில்
எண்ணங்களை கூட்டும்

வண்ணங்கள்  கவிஞனை
வர்ணிக்கச் சொல்லும்
வர்ணனை மக்களை
வசீகரிக்கச் செய்யும்

வசந்தம்  , வண்ணம்
வர்ணனை , வசீகரம்  இவை
வையத்தை  வைகுண்டமாக்கும்
வையகமே வாழ்க என்றும்  .................................

The Spring season
adds  colours to the earth
Colours make the life
very clourful bringing a lot of cheer

Colours make the poet
describe many things
Descriptions will attract
the  people's heart and
will make them feel happy

Spring ,colours
description ,attraction
make the Universeve  a Heaven
Glory to the Universe !






Friday, August 3, 2012

எல்லாம் இன்பமயம் ( need )

இறைவா  எனக்கொரு
வரம்  கொடு
இம்மானிட வாழ்விலே
பொறாமை என்பது
பொருந்தாது  போகச் செய்ய

இறைவா எனக்கொரு 
வரம்  கொடு
இம்மானிட  இனத்தை
பேராசை என்னும்
பெருநோய்  நெருங்காது  செய்ய

இறைவா எனக்கொரு 
வரம்  கொடு
இம்மானிட  இனத்திடம்
கோபம்  எனும்  மூர்க்க குணம்
இல்லாது போகச் செய்ய

இறைவா எனக்கொரு 
வரம்  கொடு
இம்மானிட  இனத்திடம்
தான் என்னும்  அகந்தை
தலை தூக்காது செய்ய


இறைவா எனக்கொரு 
வரம்  கொடு
இல்லாமை  எல்லோருக்கும்
இனி  இவ்வையத்தில்
இல்லாது போகும்படி செய்ய

இறைவா எனக்கொரு 
வரம்    கொடு
இப்பூலோகமே  எல்லா உயிர்களுக்கும்
இன்பமயமான தேவலோகமாக
மின்னச் செய்ய ......................
                                                   God of wealth and prosperity  ( Kubera )       



God
Give me a boon
to make "jealous"
unfit to the human race

God
give me  a boon
to make the disease
"greed' never touch
the human race

God
Give me a boon
to make ungovernable anger
disappear in
human race

God
Give me a boon
to make Ego
never rule the
human race

God
Give me a boon
to make poverty
disappear
for all in the Universe

God
Give me a boon
to make this Universe
a heaven for all !










Tuesday, July 31, 2012

என் உயிர் காதலியே ( romantic)

 

நீ  என் கண்ணீரில் இருந்தால்
கரைந்திடுவாயே என கலங்கி
நின்ற போது  என் சிரிப்பாக வந்தாய்
சிங்காரமாக நான் மின்ன

நீ என் வறுமையில் இருந்தால்
வாடிடுவாயோ என
வருந்தி நின்ற போது  என்
பொருமையிலே வந்து நின்றாய்   எல்லாம்
பொன்மயமாக மின்ன


நீ  என்  தனிமையிலே வந்தால்
தித்திப்பாய் என சிந்தித்தபோது  என்
சிந்தனையே    நீயாய்  இருந்தாய்
வியந்தேனடி  என் கண்ணம்மா     ...................




--

Friday, July 27, 2012

நா காக்க நல்லவை பிறக்க ( social) 2

பந்தை வேகமாக  எட்டி
உதைத்தால்
வெற்றிகள் குவியலாம் விளையாட்டிலே
உள்ளத்தை வார்த்தையால்  எட்டி
உதைத்தால்
வலிகள் தான்  குவியும்





 உள்ளங்களை  வலிகள்
உடைக்கலாம்
உள்ளங்கள்    உடைந்தால்
உறவுகள்     அழியும்
உணர்வுகள்   அழிந்தால்
உலகம்    வேறுபாடும்
வேற்றுமை   வீழ்ச்சிக்கு
விதையிடும்
விதை விதைத்த நாம்
வினை அறுக்க
நேரிடும்









நாகாக்க  காவாக்கால்
சோ  காப்பர் சொல்லிழுக்கப்பட்டு  என
வள்ளுவன் சொன்னது போல
வலிகளை  இதயம் ஏந்தினால்
வாழ்வே   நரகமாகும்




காப்போம் நாவை நாம்
வாழ்வோம்  இனிமையிலே







Wednesday, January 18, 2012


உலகமெல்லாம் என் வசம்

மாயையை அகற்று மாற்றங்கள்
 சூழ்ந்தாலும்  உன்  செயலால்   இறைவா  
மானிடன் என்   வாழ்வினிலே

பழம்   கிட்டவில்லை  என
தவம் செய்ய  புறப்பட்டாய்  இறைவா
ஞானப்   பழமாகிய   நீ 

வாழ்வை   தவமாக்கி   
மாயையில் மூழ்க வைத்தாய்   இறைவா 
மானிடன்  என்னை  நீ
 
உன்னால்   இயலாததும்   உளதோ   இவ்
வையத்திலே? ; வேண்டுகிறேன்  இறைவா    
உலகம்  என்  வசமாக
  
வேண்டுவதற்கு    இனி   வேறு   ஒன்றும்    இலாது
உயர்த்திடுவாய்  என்னையும்  நீ  கடவுளாக
உலகை   நானும்   காக்க ......