Thursday, October 10, 2013

குதூகலம் ( social)



சொக்கா  போடாமல்  இருந்தால்தான்  குழந்தையா 

   மனம்  திறந்து  இருந்தாலும்  குழந்தையே 

கையில்  கிலுகிலுப்பை  பிடிப்பது  குழந்தை  எனின் 

   மனதில்  கலகலப்பை  கொண்டதும் குழந்தையே 

பல் இன்றி வாய் மலர்ந்து சிரிப்பது குழந்தை
   பல் தெரிய மனம்  திறந்து சிரிப்பதும் குழந்தையே 

குழந்தைகள்  எங்கும்  நிறைத்து  இருந்தால் 
   
     குதூகலம் நிறைந்த உலகை காணலாம் 

Thursday, September 19, 2013

தழுவி தவழும் சுகம் (nature)

நான்   நிற்கின்ற   புனிதமான  பூமி

   அதனைத்  தழுவி வளர்ந்த

செடி கொடிகளில்  பூத்துக் குலுங்கும்

   வண்ண மலர்களைத்  தழுவிய  காற்று

மேகமதை   எட்டித்     தழுவ 

   மேகமது  இறங்கி வந்து

மலைகளின்  மேல்   தவழ 

     மலையின் அழகு என்  மனதை  தழுவ 

என்  மனமோ இயற்கையின் மடியில் தவழ 
 
இனிய  பல  எண்ணங்கள்
   
  மெல்ல  என்   உணர்வைத்  தழுவ 

இரவின் நிலவொளியின் அணைப்பில்

  தூக்கம் என் கண்களைத்  தழுவ 

ஒரு  புது  உலகப்  பயணம்  நேர்ந்ததே.................... 

Saturday, August 31, 2013

இனிமை இதுவே ( social)

வெறுப்பைக்  காட்டி

வேதனையை  கூட்டாமல்

சிரிப்பை  உதிர்த்து

சிந்தனையை  பெருக்கி

நெஞ்சை நிறைத்து ( தொட்டு)

தெய்வத்தை  கூப்பிட்டு

வாழும்   இடத்தை

சொர்க்கம் ஆக்கிடலாமே

இனிமை இதுவே

Monday, March 11, 2013

மோக்ஷம் ( social)

மிகச் சிறிய அறை   ...அதில்
மிகுந்து இருந்தது மாதர்களின்
கூட்டம்
உத்தரவு வரும்  நேரம் மட்டும்
பேசும் உபத்திரம் குறையும்
மறுபடி மறுபடி திறப்பு விழா
பெண்களின் வாய்க்கு ஏது பூட்டு
கண்டுபிடித்தால் அவனுக்கு
நோபெல் பரிசுதான் ---

என்றாலும் 
படைத்தவன் முட்டாள் அல்லவே
வாய்களை எண்ணிவிடலாம்  ----- அதில்
வரும் வார்த்தைகள் எண்ணற்றது
அயரும் நேரம் வரலாம்
அதை கண்டு அகிலம் அல்லவோ
அதிர்ந்து விடும்

வார்த்தைகள் ஜாலங்கள் செய்யட்டும்
ஜாலங்கள் மாயைகளை  அகற்றட்டும்
மாயங்கள் நீங்கினால்
மௌனம் பிறக்கும் அங்கே
மௌனம் மோக்ஷம் காட்டும்

Saturday, December 1, 2012

அணைப்பு ( Divine)

ஆண் பெண் அணைப்பில்
காதல் சுகம்

அன்னையின் அணைப்பில்
ஆயிரம் சுகம்

குழந்தைகளின்  அணைப்பில்
 கோடி சுகம்

ஆண்டவன் அணைப்பில்
 அற்புத சுகம்

Thursday, October 4, 2012

புது உலகம் காண .....

ஆசைகள்  அலை மோதும்
வாழ்வெனும் கடலின்
ஆழம் பார்க்க விருப்பமில்லை ...எனவே
இறைவா
புது வாழ்வு கொடுத்துவிடு
இப்பிறப்பை நானும் வெல்ல



ஆழ்துயர் யாவும் ஆண்டு
அதன் அரசியாக நிற்கிறேன்  இனி
ஆணையிட ஏதும் இல்லை

இறைவா
புது  வாழ்வு கொடுத்துவிடு  இப்
பிறப்பை நானும் வெல்ல ....

புதுமைகள்  யாவும்    படைத்து
புது  உலகம்  நான்  காண


Monday, September 10, 2012

உல்லாசம் காண்போம் ( social)

வானத்தை நோக்கி கரு
மேகத்தை நான் காண 
மழையது  சாரல் என்
தலையை   மெல்ல வருட

இளமைக் காலம் இதமாக
இமைகளை தடவ  சிறு
பிள்ளையென நானும் ஆகி
சின்னஞ் சிறு குழிகளில்

காகித கப்பலிட்டு
கைக் கொட்டிச் சிரிக்க
சாலையில் செல்லும் சிறு
பிள்ளைகளும் உடன் சேர

கப்பலின் எண்ணிக்கை
குழிகளை நிரப்ப  எங்கள்
கன்னங்கள் குழிய முகத்தில்
சந்தோஷம் நிரம்ப 

கப்பல்கள் மெல்ல கரை தாண்டி
கன்னங்களின் குழியில்  மிதக்க
உல்லாச பயணம் செல்ல
ஊர்  முழுதும் திரள

ஏலேலோ  ஐலசா  ( அய்லசா )
ஏகாந்தமாய் எங்கும் ஒலிக்க ................
பிள்ளைப்    பருவத்தில்
உல்லாசம்   காண்போம்